தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஏப்ரல், 2016

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா?..

இறைவன் கொடுத்த இந்த உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது அந்த உயிரின் சொந்தக்காரருக்கும் பொருந்தும். ஆயினும் சிலர் தங்களுடைய வாழ்வின் முட்டாள்தனமான முடிவை இறுதியில் எடுத்து விடுகின்றனர்.

இதற்கு சாமனியனும், பிரபலங்களூம் விதிவிலக்கல்ல. நடிகர் ப்ரத்யுஸ்ஸா பானர்ஜியின் தற்கொலை நம்முன்னே முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றது.
தற்கொலை செய்து கொண்ட பின் அந்த உடலை விட்டு, ஆன்மா வெளியேறி விடுகின்றது. அந்த ஆன்மாவிற்கு என்ன நேரிடுகின்றது?. தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவிற்கும், இயற்கையான முறையில் மரணமடைத்த ஆன்மாவிற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?.
இறைவனின் இறுதித் தீர்ப்பு இரண்டு ஆன்மாவிற்கும் சமமானதா?. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது ஒரு சுழற்சி
தற்கொலை இயற்கையான மரணம் இல்லை. இந்த மரணம் இயற்கைக்கு மாறானதாகும். இது ஆன்மீகம் கூறிய வழிமுறைகளுக்கு எதிராகும். இவ்வுலகில் உள்ள பல்வேறு மதங்களில் மிகப்பெரிய பாவமாக தற்கொலை கூறப்படுகின்றது.
இது வேறு நடைமுறை
சாதாரண மற்றும் இயற்கையாக இறந்தவர்களுக்கு பொருந்தும் வழிவகைகள் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு பொருந்தாது.
என்ன நடக்கும்?
தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மா காம லோகத்தில் (மனம் அல்லது வெளி ஊடுருவிப்பாயும், பூமியைச் சுற்றியுள்ள ஒரு வெளி) சிக்கிக் கொள்ளும். அங்கிருந்து அவைகளால் பூமியில் நடப்பதை முழு உணர்வோடு பார்க்க முடியும்.
எல்லாவற்றையும் பார்க்க முடியும்
அவர்கள் தாங்கள் இருந்து வந்த சூழ்நிலை மற்றும் பழகிய மனிதர்களின் செயல்களை தொடர்ந்து காண வேண்டும். காம லோகத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட உண்மையான ஆயுள் வரை தங்கியிருந்து எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை சுழற்சி
உதாரணமாக, ஒருவருக்கான கர்மாவில், 90 ஆண்டுகள் ஆயுள் விதிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அவர் 20 வயதில் தன்னுடைய ஆயுளை முடித்துக் கொள்ளுகின்றார் எனில், மீதியுள்ள 70 ஆண்டுகளை அந்த ஆத்மா எவ்வித முன்னேற்றமும் இன்றி காம லோகத்தில் கழிக்க வேண்டும்.
மேலே நகர முடியாது
தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவிற்கு, மரணத்திற்கு பிந்தைய செயல்முறை முடிவடையாது. அந்த ஆன்மாவிற்கு விதிக்கப்பட்ட முழுமையான ஆயுள் முடிவடையும் வரை, அந்த ஆத்மாவினால், மேலோகம் அல்லது சொர்க்கத்திற்குள் செல்ல முடியாது.
இது ஒரு பொறி
தற்கொலை செய்து கொண்டவர்கள் உண்மையிலேயே ஒரு பொறியில் சிக்கிக் கொள்வதாக நம்பப்படுகின்றது. இந்த பொறியில் அவர்கள் அனுபவிக்கும் துன்பமானது, இந்த பூமியில் எந்த துன்பத்திலிருந்து தப்பிப்பதற்காக தற்கொலை செய்து கொண்டார்களோ, அதை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு தண்டனை அல்ல
தற்கொலை செய்து கொண்டவர்கள், தங்களுடைய உண்மையான ஆயுள் முழுவதும், காம லோகத்தில் வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதை நாம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டணை என்கிற அர்த்தத்தில் அணுகக்கூடாது. ஒவ்வொரு மனிதனும் ஏழு பாகங்கள் அல்லது கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளான் என்கிற உண்மையை உணர்த்தவே இந்த நடைமுறை உள்ளது.
இது ஒரு செயல்முறை
சில சமயங்களில் கூறுகள் பிரிந்துவிட்டது என்றால், அந்த தனிநபர்கள் மீண்டும் முழு சுழற்சிக்கு உட்பட வேண்டும்.
இயற்கையாக இறந்தவர்களின் நடைமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது
ஒருவர் இயற்கையாக மரணமடைகின்றார் எனில், அவருடைய விதி அவருடைய ஆயுட்காலம் முழுவதும், அவரை ஆட்கொண்டு, அவரை ஆட்டுவித்து, அவரை முழுவதுமாக ஆக்கிரமித்து, படிப்படியாக தன்னுடைய செயலை நிறுத்திக் கொள்ளும். ஆனால் மேற்கூறிய நடைமுறை தன்னுடைய உயிரை தானே எடுத்துக் கொண்டவர்களுக்கு பொருந்தாது.
உயிருடன் இருப்பது போல்
தற்கொலை செய்து கொண்டவர்கள் உயிருடன் இருப்பதாகவே கருதப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த உடல் கிடையாது. உயிருடன் இருந்த பொழுது இருந்ததை விட, அவர்கள் தற்பொழுது ஒரு பொறியில் சிக்குண்டு, மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றார்கள்.
வருத்தம் மற்றும் ஆசைகள்
இதுப்போன்று இறந்தவர்கள், அடக்க முடியாத ஆசை, மற்றும் வருத்தத்துடன் அல்லல் படுவார்கள். அவர்கள், தங்களுடைய ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள இந்த பூமியில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முயலுவார்கள். எனவே அவர்களால் இங்குள்ள சில மீடியங்களை அல்லது சில மீடியங்கள் இவர்களை மிக எளிதாக தொடர்பு கொள்ள இயலும்.
திரும்பி போக முடியாது
அவ்வாறு அவர்களால் மிக எளிதாக தொடர்பு கொள்ள இயலாது. ஏனெனில் இது ஆன்மீக விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது.
இறுதியின் ஆரம்பம்
ஒருவரின் இயற்கையான வாழ்க்கையின் இறுதியில், அவர் தன்னுடைய வாழ்வை தற்கொலையின் மூலம் முடித்துக் கொள்கின்றார். அதன் மூலம் அவருடைய ஆன்மா தன்னுடைய உடலை இழக்கின்றது. தற்கொலை என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்றும் கூறப்படுகின்றது.
ஒரு இருண்ட விதி
ஒரு இருண்ட விதியானது இயற்கையாகவே ஒரு சிலருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. அது அவர்களின் கர்ம விதியினால் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டு, எண்ணற்ற துன்பத்திற்கு ஆட்படுகின்றார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக