தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கீ பெர்த் டே நமக்கு எதற்கு??!


கொண்டாடவேண்டும்,காசை கரியாக்கவேண்டும்,போதையில் ஆடி  பேதையாக  வாழவேண்டும்!

நாமும் அவர்களை விட குறைந்தவரா என்றெண்ணி பல கொண்டாட்டங்கள் கருத்தறியாமலே நம் ஈனத்தமிழரால்(தமிங்கிலேயர் அல்லது தங்கிலீசுக்காரர்) கொண்டாடப்படுகின்றன!
அதில் குடி,கூத்து நிச்சயம் உண்டு,பாட்டுக்களோ குழந்தைகளை பிஞ்சிலே பழுக்கவைக்கும்!
ஆனால் நம் தமிழ்,இந்துக்கலாச்சார விழாக்கள்(ஆண்களுக்கே நாற்பத்தொரு வகையான சடங்குகள் கொண்டாடப்பட்டதாம்)கைவிடப்பட்டு அவற்றைப்பற்றிய அறிவே இன்று இல்லாது போயுள்ளது!
மேலைத்தேய,ஆப்பிரிக்க கொண்டாட்டங்களும் நடனங்களும் இசைக்களுமே நம்மை இன்று ஆள்கின்றன!
இதில் பல அவர்களுக்கு மட்டுமே பொருந்துவன!காரணம் அவர்கள் வாழ்க்கைமுறை,சட்டங்கள்,விதி அப்படி!
உதாரணமாக இந்த கீ பெர்த் டே!
இதன் அர்த்தம் தெரிந்தா நம்மவர் கொண்டாடுகின்றார்கள்?பணம் இருந்தால் கொண்டாடுவதா?(சந்தானம் மிஞ்சினால்...இதுதான் அறிவிலிகள் செயலாச்சே!)
இது ஐரோப்பாவில் உள்ள நடைமுறை!
காரணம் அந்த வயதை அடைந்ததும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டே ஆகவேண்டும்!அவர்களுக்குரிய உதவிகள் அரசால் அவர்களிடமே கொடுக்கப்படும்,அவர்களும் அன்றிலிருந்து சுருவருக்கான சட்டத்தை கடந்து வளர்ந்தோருக்கான சட்டத்துள் வந்துவிடுகின்றனர்! அனைத்துக்கும் அவர்களே பொறுப்பேற்றாக வேண்டும்!அதற்குரிய திறப்பே இந்த கொண்டாட்டம்!
அதாவது பெரும்சுமைகளை நம் தலையில் சுமக்கும் பொறுப்பேற்கும் துன்ப நாள்!இதை கொண்டாட....
ஐரோப்பாவில் அரசு அனைத்தையும் ஒழுங்கு செய்து தொழிலுக்குரிய படிப்பையும் கொடுத்து விடுகின்றது,சுமை மிக மிக குறைவு பெற்றோருக்கும் கீ பெர்த் டே பிள்ளைக்கும்!
இது நம் நாட்டில் எப்படி பொருந்தும்?
கொண்டாட இதில் என்ன நன்மைகள் உள்ளன?
புரியவில்லை எனக்கு!
அன்றிலிருந்து பெற்றோர் பிள்ளைகளை கட்டுப்படுத்தவோ கண்டிக்கவோ முடியாதே!இதில் இதை பெற்றோர் விமர்சையாக கொண்டாடும் காரணம் அறிவீனமா இல்லை பலயீனமா?
இதைப்போலத்தான் பச்சிலர் கொண்டாட்டம்,காதலர் தினம்,அன்னையர் தினம்.....என சொல்லிக்கொண்டே போகலாம்!
இயந்திரமாய் வாழும் ஐரோப்பியருக்கு இவை அவசியமாகும்,ஆனால் அன்பே சிவமாய் வாழும் தமிழனுக்கு எதற்கு??
அன்னையை கொண்டாடுவது ஒருநாளில் மட்டுந்தானா?மனைவியை மகிழ்விக்க ஒரு நாள் மட்டுந்தானா?
சிந்தித்தால் சிரிப்புவரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக