தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

உங்க இதய ரேகை உங்கள பத்தி என்ன சொல்லுது ?பார்க்கலாமா?....


அனைவரது கைரேகையும் வெவ்வேறு மாதிரி தான் இருக்கும் என நாம் யாரும் அறிந்தது தான். ரேகைகளில் சிலவன மிக முக்கியமானதாக திகழ்கின்றன. தன ரேகை, ஆயுள் ரேகை, இதய ரேகை மற்றும் திருமண ரேகை போன்றவற்றை வைத்து ஒருவரது இல்லறம், ஆரோக்கியம், செல்வம் போன்றவை எப்படி அமையும் என கூற முடியும்.

இதில் இதய ரேகையை வைத்தும் கூட ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும், அவர் மற்றவரிடம் எப்படி பழகுவார், அவரது லட்சியம், மனப்பான்மை, மக்கள், சமூகம் மீதான பார்வை எப்படி இருக்கும் என கூற முடியுமாம். இந்த வகையில் உங்களது இதய ரேகையை வைத்து உங்களை பற்றி எப்படி அறிவது என இனிக் காண்போம்...
முதலாவது
உங்கள் இதய ரேகை நடுவிரல் நோக்கி இருப்பது போன்று இருந்தால் நீங்கள் லட்சிய வெறி கொண்ட நபராக இருப்பீர்கள். வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் அதிகமாக இருக்கும்.
மேலும் உங்களிடம் நற்குணங்கள் அதிகமாக காணப்படும். மற்றவரை நீங்கள் கணிக்கும் முறை, நீங்கள் எடுக்கும் முடிவுகள் கச்சிதமாக இருக்கும். மற்றவரோடு இணைந்து பணியாற்றுவதில் சிறந்து விளங்குவீர்கள்.
இரண்டாவது
நீங்கள் மிகவும் மரியாதை செலுத்தும், அன்பு காட்டும், கனிவான, நம்பகமான நபராக இருப்பீர்கள். வெளிப்படையாக பேசும் மனம் கொண்டிருப்பீர்கள்.
அனைவரும் விரும்பும் நல்ல மனிதராக நீங்கள் திகழ்ந்தாலும், உங்கள் மீது அக்கறையும், பாதுகாப்பு உணர்வும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மூன்றாவது
நம்பிக்கை தான் உங்கள் பலம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் நேசிக்கும் நபராக இருப்பீர்கள். ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நாளையும் விரும்பி வாழும் மனிதராக திகழ்வீர்கள்.
தனியாக இருப்பினும் சரி, நண்பர்களுடன் இருப்பினும் சரி, உறவில் இருப்பினும் சரி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களை சார்ந்து இருக்காமல், உங்களை சார்ந்தே இருக்கும்.
நான்காவது
அமைதி, பொறுமை, அக்கறை, கனிவான இதயம் போன்றவை உங்களது நற்குணங்கள். மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமாக, அன்புடன், உண்மையாக பழக காரணியாக இருக்கும்.
தர்மம் செய்வது, மற்றவருக்கு உதவி செய்தல், தொண்டு காரியங்களில் ஈடுபடுதல், சமுதாய பணிகளில் உங்களை உட்படுத்திக் கொள்வதில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.
- See more at: http://www.manithan.com/news/20160421119647#sthash.EMzzstRi.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக