தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 மார்ச், 2016

பஞ்சகச்சம் அணிவது எப்படி ?




பஞ்சகச்சம் அணிவது எப்படி ? மிகவும் சுலபம் ! அனைவரும் அவசியம் படித்து, பகிர்ந்து கொள்ளவேண்டியது “ 
ராம் ! ராம் ! கடந்த சில தினங்களாகவே , மதிப்பிற்குரிய நமது Friend ,Philosopher and Guide ஸ்ரீ ஸர்மா ஸாஸ்த்ரிகள், நமது பாரம்பரியத்துக்கும், ( கலா) ஆச்சாரத்துக்கும் உரிய , கிரஹஸ்தர்கள் (திருமணமான ஆண்கள்) அணிய வேண்டிய அவசியமான ( Essential &Must ) , பஞ்சகச்சத்தின் பெருமையையும், முக்கியத்தையும், , வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்கள் கூட, தெய்வீக, வைதீக நிகழ்ச்சிகளில் கூட அதை அணிவது இல்லையே என்ற ஆதங்கத்தையும் , பாரம்பரியமிக்க அந்த உடையில் பல கிரஹஸ்த்தர்களை ஒன்றாக பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்கள் ! நாளையதினம் சிவ ராத்திரியன்று கோவிலுக்கு போகும்போது கிரஹஸ்தர்கள் தவறாமல் பஞ்சகச்சம் அணிந்து செல்லலாமே என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
ஸ்ரீ ஸர்மாஜி அவர்கள் தொடர்ந்து ஊதிக்கொண்டிருக்கும் சங்கின் ஒலியினால் விரைவில் , நல்ல , இனிய காலைப் பொழுதாக விடியும் என்பது நிச்சயம் !
சரி ! பஞ்சகச்சம் அணிவது எப்படி ? அது ஒன்றும் அவ்வளவு சிக்கலான, கடினமான, செயல் இல்லை! சரியாக புரிந்து கொண்டால் மிகவும் எளியது ! பழகி விட்டால் சில நிமிடங்கள் தான் தேவை ! ஏதோ எனக்குத் தெரிந்த அளவு ( அடியேன் 40 வருஷங்களுக்கும் மேலாக , சந்த்யாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் , பூஜைகள் விசேஷங்கள் , பஜனை நிகழ்ச்சிகள் என பல சந்தர்பங்களில் பஞ்ச கச்சம் அணிந்துவருகிறேன் ) . பஞ்சகச்சம் கட்டிகொள்ளும் / உடுத்திக்கொள்ளும் முறை பற்றி விளக்குகிறேன் ! அனேகமாக சரியான method தான் என நினைக்கிறேன். ! இதைப்பார்த்த , படித்த ஒரு சிலராவது நமது பாரம்பரிய உடைக்கு மாறுவார்கள் என்ற எண்ணத்தில்  பகிர்ந்து கொள்கிறேன்.
பஞ்ச கச்சம் உடுத்திக்கொள்ளும் முறை ( தேவையான மாறுதல்கள் திருத்தங்களுக்கு உட்பட்டது / Subject to corrections / modifications if necessary )
பஞ்சகச்சம் கட்டிகொள்ள ஒன்பது முழம் வேஷ்டியும் . ஐந்து முழம் துண்டும் ( அங்க வஸ்த்ரம்/ உத்தரீயம்) தேவை ! எட்டு முழம் வேஷ்டி அளவு கம்மியாக (insufficient ) இருக்கும். இங்கு சொல்லப்படும் அளவுகள் தோராயமானவை ( Approximate ) அவரவர்கள் உயரம், உடல்பருமனுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் .
1) 9 முழ வேஷ்டியை முழுதாகப் பிரித்து இடுப்பின் பின்புறம் தொட்டுக்கொண்டிருக்கும்படி இரு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும்..
2) இடது பக்கம் உள்ள பகுதியை,வயிற்றுப்பக்கம் கொண்டுவந்து, வயிற்றுக்கு வலதுபக்கம் சுமார் ஒரு சாண் ( 9 அங்குலம் ) இருக்கும்படி பிடித்துக்கொண்டு அங்கிருந்து பாதம் வரை (சுமார் 3முழம்) தொங்கும்படி பிடித்துக்கொண்டு அதன்மேல் மீதி உள்ள ஆறு முழம்பகுதியை, வயிற்றின் மையப்பகுதி வரை கொண்டுவந்து , கொஞ்சமாக ( தேவையான அளவு ) இறுக்கி, வேஷ்டி இடுப்பிலிருந்து , நழுவாதபடி மேலிருந்து கீழாக உருட்டி விட்டுக்கொள்ளவும்.
3) இடதுபுரம் உள்ளே தொங்கும் சிறிய பகுதியை எடுத்து, உள்ளங்கையில் நாலு விரல் அளவு அகலமாக மடித்து , மடிப்புகளை நீவி ஒழுங்கு படுத்திக்கொண்டு, அதைக் கால்களின் நடுவாக பின்புரம் கொண்டு சென்று, முதுகுப்பக்கம் சொருகிக்கொள்ளவும். இப்போது இடது பக்கம் பாதம் வரை வேஷ்டி இருக்கவேண்டும்.
4) முன்புரம் தொங்கும் நீளமான 5 to 6 முழம் பகுதியை எடுத்துக்கொள்ளவும். நடு வயிற்றுப்பகுதியில் தொங்கும் , வேஷ்டியின் வர்ணமான கரை.உள்ள பாகத்தில், கீழே தொங்கும் நுனியில் ஆரம்பித்து ,நாலு விரல் அளவுக்கு ( முன்பு Step No.3-ல் உள்பக்கம் தொங்கும் பாகத்தை மடித்தது போல ) மடித்து , வயிற்றின் நடுப்பகுதியில் சொருகிக்கொள்ளவும் .
5) பாதம் வரை கீழே தொங்கும் பகுதியை எடுத்து, , அதையும் முன்பு போல நாலு விரல் அளவு மடித்துக்கொள்ளவும். அதை வயிற்றின் நடுப்பகுதியில், தேவயான உயரம் , இறுக்கம் ( Tightness) உள்ளபடி சொருகிக்கொண்டு, முன்புரம் தொங்கும் கரைப்பகுதியை விரல்களால் நீவி ஒழுங்கு படுத்தவும்.
6) இரு கால் பக்கங்களிலும் பாதம் வரை தொட்டுக் கொண்டிறுக்கும்படி, வெளிப்பக்கம் தெரியும் வர்ணக் கரைப் பகுதியை , லேசாக , இங்கும் அங்கும் இழ்த்து Adjust செய்யவும்.
7) தேவப்பட்டால் , ( வேஷ்டி அவிழ்ந்துவிடுமோ என்ற பயம் இருந்தால் ) பெல்ட் அல்லது வேறு ஒரு துண்டு, இடுப்பில் கட்டிக்கொள்ளவும்.
8) ஐந்து முழம் அங்கவஸ்த்திரத்தை, தேவையான அகலத்துக்கு Lengthwise -ஆக மடித்துக்கொண்டு, இடது தோளின்மீது போட்டுக்கொண்டு, , பின்பக்கம் தொங்கும் பகுதியை வலதுபுறம் தோளின் கீழாக ( அக்குள் வழியாக ), இடது தோள்மேல் போட்டுக்கொள்ளவும் . இது உத்தரீயம் எனப்படும்.
9) அல்லது இடுப்பில் வட்டமாக சுற்றிக்கட்டிக்கொள்ளவும் .
அவ்வளவுதான். பஞ்சகச்சம் ரெடி ! வீடியோவிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக