தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 7, 2016

சிவனுக்கு உகந்த “மகா சிவராத்திரி”! வரலாற்றை தெரிந்து கொள்ள.. (வீடியோ இணைப்பு)


சிவராத்திரி என்றால் சிவனுக்கு உரிய இரவு என்று பொருள். சிவராத்திரியான இன்று பக்தர்கள் சிவாலயங்களுக்கு சென்று இரவு முழுதும் உறங்காமல் கண்விழித்து சிவனை நினைத்து தியானிப்பார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறையில் சதுர்த்தசி வருகிறது. அது சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உட்பட பத்து புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சிவராத்திரியின் சிறப்பு
அன்றைய தினம் விரதம் இருந்து, சிவாலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டால் சிவபெருமானின் அருளை சிறப்பாக பெறலாம் என்பது ஐதீகம்.
மாசிமாத சதுர்த்தசி அன்றுதான் பார்வதிதேவி சிவபெருமானை எண்ணி வழிபட்டார். அன்றைய பகல் சிவபெருமானுக்கும் இரவு பார்வதிதேவிக்கும் உரியதாக பிரிக்கப்பட்டது.
ஆனாலும் அன்னையாருக்கு உரிய இரவே சிவபெருமானுக்கு மேலானதாக கொண்டாடப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
சிவராத்திரி உருவான வரலாறு
ஒரு பிரளய காலத்தில் உலகில் உள்ள மனிதகள், விலங்குகள், தாவரங்கள் உட்பட அனைத்து உயிர்களும் அழிந்தன. படைப்புக்குரிய பிரம்மனும் அந்த பிரளயத்தில் அழிந்தார்.
உலகம் உயிர்களற்று வெறுமையானது. அந்த உயிர்களெல்லாம் சிவனி (ஜீவன்) டத்திலே சென்று அடங்கின.
மீண்டும் இந்த உலகம் உருவாகி இயங்க வேண்டும் என சிவனை நினைத்து மனமுருகி பார்வதிதேவி தியானம் இருந்தார்.
அதன் விளைவாகவே சிவபெருமான் தன்னுள் ஒடுங்கியிருந்த உயிர்களை மீண்டும் தோன்றச் செய்தார். உலகம் மீண்டும் புத்துயிரோடு இயங்கலானது.
இந்த மகிழ்ச்சியில் சிவனிடம் மேலும், நான் தங்களை நினைத்து தியானித்த இந்த நாளை, சிவராத்திரியாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் பார்வதிதேவி வைத்தார்.
அப்படி விரதம் இருக்கும் மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்க, நல்வாழ்வு அமைய, உங்கள் அருள் கிடைக்க வேண்டும் என்றார்.
சிவபெருமானும் அப்படியே அருளினார். இதுவே சிவராத்திரி உருவான புராண வரலாறு.
கோவில்களில் கொண்டாட்டம்
மதம் மற்றும் கலாசார திருவிழாக்கள் எல்லாவற்றிலுமே காலத்திற்கேற்ப ஒரு புதிய பரிணாமம் கொண்டாடும் விதத்தில் மலர்ந்துள்ளாது.
சிவாராத்திரியில் இரவு முழுதும் பக்தர்கள் சிவனை நினைத்து கண்விழித்திருப்பதால் அந்த இரவை கொண்டாட, கொடைகுணம் கொண்டவர்கள் உணவு வகைகள் வழங்குவதும், பிரசங்கம் உட்பட்ட சிறு கலைநிகழ்ச்சிகள் நடத்துவதும் கோவில்களில் சிறப்பாக நடந்துவருகிறது.
-மருசரவணன்

No comments:

Post a Comment