தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 பிப்ரவரி, 2016

ஸ்வீட் எடு...காதலர் தினத்தை கொண்டாடு!

காதலர் தினத்திற்கு வண்ண வண்ண மலர்கள், மனதை கவரும் பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொண்டாலும், இனிப்பான சொக்லேட் Miss ஆகி விட்டால், கசப்பான தருணங்கள் காதலில் Yes ஆகிவிடும்.
சுட்டிக்குழந்தைகள், பெரியவர்கள், காதலர்கள் என அனைவரது வாழ்க்கையிலும் முக்கிய இடம்பிடித்துவிடும் இந்த சொக்லேட்டை பற்றி அறிவியல் ரீதியான பார்வை இதோ,
500 BC: தெய்வீக உணவு
கொக்கோ என்ற வார்த்தை "காக்கவா" என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும், 500 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாயன்கள் இந்த சொக்லேட்டினை தெய்வீக உணவு என்று கருதி வந்தார்கள்.
இந்த மாயன் மக்கள் வாழ்ந்த காலத்தில் சொக்லேட் தயாரிக்கப்பட்ட மண்பாண்டங்களில் கூட இந்த சொக்லேட் தயாரித்தற்கான தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மாயன் காலத்தில் புரோகிதர்கள் மற்றும் பணக்காரர்களும் சாப்பிடுவதற்கு மட்டுமே இந்த சொக்லேட் பயன்படுத்தப்பட்டது.
1500 - சுத்தமான பானம்
1502 முதல் 1502 வரை, மெக்சிகோ நாட்டின் இரண்டாம் மன்னரான Aztec Emperor Montezuma என்பவரின் ஆட்சி காலத்தில், இந்த சொக்லேட், சோர்வினை நீக்கி, நோயெதிர்ப்பு சக்தி தருவதாக கருதப்பட்டது, மேலும் ஒரு கப் அளவில் கொக்கோ பானத்தை அருந்தினால், அந்த நாள் முழுவதும் பிற உணவுகள் சாப்பிடாமல் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என கூறப்பட்டது.
1577: கொஞ்சம் சொக்லேட் சாப்பிடுங்கள்!
16 ஆம் நூற்றாண்டில் மருத்துவ சிகிச்சைக்காக சொக்லேட் பயன்படுத்தப்பட்டது, காய்ச்சல், இருமல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சொக்லேட் பயன்படுத்தப்பட்டது, 1577 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த explorer Francisco Hernandez என்பவர், மெக்சிகன் மக்கள் வறுத்த கொக்கோ கொட்டையை எவ்வாறு, வயிற்றுக்கடுப்புக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தரும் விதமாக, 5 நூற்றாண்டுகளுக்கு பிறகு, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சியில், flavonoid antioxidants எனும் மூலப்பொருள் கொக்கோவில் உள்ளது, இந்த மூலப்பொருளானது குடலில் திரவங்கள் சுரப்பதை தடுக்கிறது, எனவே இது வயிற்றுக்கடுப்புக்கு இயற்கை நிவாரணியாக உள்ளது என தெரியவந்தது.
1719: இரவு உணவு
Frenchman D. De Quelus என்பவர் 15 ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியில், மாட்டிறைச்சியில் உள்ள ஊட்டச்சத்தின் அளவை விட சொக்லேட்டில் உள்ள ஊட்டச்சத்து அதிகம் என கண்டுபிடித்தார், பல்வலியின் போது மாட்டிறைச்சியை சாப்பிட முடியாமல் அவதிப்படும் அமெரிக்க மக்கள், சொக்லேட்டினை வெந்நீரில் கலந்து, கொஞ்சம் சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டை சேர்ந்து சாப்பிடுவார்கள், அந்த அளவுக்கு இதில் ஊட்டச்சத்து அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது.
1825: மாத்திரைகள்
சில மாத்திரைகள் சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக இருக்கும், அப்போது அந்த மாத்திரை வில்லைகளை சொக்லேட்டில் தோய்த்து எடுத்து நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் சொக்லேட்டில் உள்ள கசப்புத்தன்மை குறைந்துவிடும்.
1864: சிபிலிஸ் நோய்
நாள்பட்ட பாக்டீரிய தொற்றுநோயான சிபிஸ் நோயிலிருந்து சொக்லேட் பாதுகாக்கிறது, இந்த சொக்லேட்டினை, சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டையுடன் கலந்து சாப்பிட்டால் சிபிலிஸ் நோய்க்கு தீர்வு கிடைக்கும்.
1875: மில்க் சொக்லேட்டின் பிறப்பு
1875 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டை சேர்ந்த Daniel Peter unveiled என்பவர், மில்க் சொக்லேட்டினை கண்டுபிடித்தார், காபியை விட மில்க் சொக்லேட்டில் அதிக சத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்ட்டது, 1904 ஆம் ஆண்டு Cadbury சொக்லேட் கண்டுபிடிக்கப்பட்டது, அதுவரை மில்க் சொக்லேட் தான் சந்தையில் முதல் இடத்தில் இருந்தது.
1900: ஊட்டச்சத்து
Milton S. Hershey என்பவர் caramel candy சொக்லேட்டை 1880 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார், 1990 ஆம் ஆண்டு அந்த சொக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது, பென்சிலோனியா நாட்டு மக்களுக்கு இவர் சொக்லேட்டை குறைவான விலையில் கொடுத்தார், மேலும், இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு சொக்லேட்டிலும் இருந்ததால் அமெரிக்க மக்கள் இதனை விரும்பி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
1989: மன அழுத்தம்
சொக்லேட் உட்கொள்வதில் அதிக நாட்டம் கொண்ட 2 பெண்மணிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அதில் ஒருவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு, தினசரி 2 பவுண்ட்ஸ் சொக்லேட் உட்கொள்ள பரிந்துரைத்துள்ளார்கள்.
அதில் மன அழுத்த நோய்க்கு பயன்படுத்தும் bupropion எடுத்துக்கொண்ட பெண்மணி அதன் பின்னர் சொக்லேட் உணவுகளை அறவே ஒதுக்கியுள்ளார். இருப்பினும் வேறு உணவுகள் மீது அவருக்கு இருந்த நாட்டம் குறையவே இல்லை.
1996: போதை தருகிறதா?
இனிப்பு மிகுந்த சொக்லேட்டை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால், சொக்லேட்டில் உள்ள caffeine எனும் நச்சுப்பொருள், போதை மருந்துகளில் ஒன்றான மர்ஜீனாவிலும் உள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்தது
1998 : பீட்சாவை மிஞ்சிய சொக்லேட்
பீட்சா, பிரெஞ்சு பிரையை விட சொக்லேட் ஒரு சிறந்த உணவாகும், இங்கிலாந்தில், மனச்சோர்வு மற்றும் மன அழுத்ததில் இருந்த சுமார் 300 பேரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அவர்களுக்கு சொக்லேட் சாப்பிட பரிந்துரைக்கப்பட்டது.
அப்போது சொக்லேட்டில் உள்ள Endorphins எனும் மூலக்கூறு நரம்பு மண்லத்தை தூண்டி அவர்களை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது
2002: புற்றுநோய்க்கு மருந்து
சொக்லேட்டில் மிகுதியாக காணப்படும் ஆன்டி ஆக்ஸிடண்ட் வேதிப்பொருளான catechin நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக அளவு சொக்லேட் எடுத்துக்கொள்ளும் முதிர்ந்த வயது பெண்களில் மலக்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பு 45% குறைவாக காணப்பட்டது. இருப்பினும் சொக்லேட்டை விடவும் catechin மிகுதியாக காணப்படும், தேநீர், ஆப்பில், பேரிக்காய் உள்ளிட்டவைகளை உட்கொள்பவர்களுக்கும் புற்று நோய்க்கான வாய்ப்பு உள்ளது.
2004: அழும் குழந்தைகளுக்கு
கர்ப்பிணி தாய்மார்கள் பாதி அவுன்ஸ் டார்க் சொக்லேட்டினை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல துடிப்புடன் இருக்கும். மேலும் கர்ப்பிணி தாய்மார்க்ளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.
2006: நீரிழிவு நோயாளிகளுக்கு
தொடர்ந்து 15 நாட்களுக்கு டார்க் சொக்லேட்டினை சாப்பிட்டால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு சீரான அளவில் இருக்கும், மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, அதுமட்டுமின்றி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீரான அளவில் வைக்க உதவுகிறது.
2006: ஆரோக்கிய இதயம்
அமெரிக்காவில் உள்ள பனமா எனும் தீவில் வாழும் குணா இந்தியர்கள் ஆரோக்கியமான இதயத்துடன் வாழ்வதற்கு கொக்கோவே காரணம் என ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்தது, ஏனெனில் அவர்கள் கொக்கோ பானத்தை குடிப்பதால், அதில் உள்ள antioxidants இரத்த நாளங்களை விரிவடையச்செய்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, இதனால் அவர்கள் ஆரோக்கிய இதயத்துடன் வாழ்ந்துள்ளனர்.
2008: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
2008 ஆம் ஆண்டு இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு 0.3 அவுன்ஸ் அளவு டார்க் சொக்லேட் எடுத்துக்கொண்டால், இதய நோய்கள் தாக்காது என கண்டுபிடிக்கப்ட்டது, ஆனால் ஒரு நாளைக்கு மூன்றில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டால், அதன் உரிய பலன் கிடைக்காது.
2010: நாள்பட்ட சோர்வு
நாள்பட்ட சோர்வால் பாதிக்கப்பட்ட (Chronic fatigue sundrome) நபர்கள், டார்க சொக்லேட்டை சாப்பிடும் போது அதில் உள்ள polyphenol antioxidant சுறுசுறுப்பை ஏற்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவுகிறது.
2011: போதை கிடையாது!
போதை தரும் உணவு வரிசையில் சொக்லேட் சேர்க்கப்பட்டது, ஆனால், சர்க்கரையில் உள்ள வேதிப்பொருட்கள் விரைவில் இரத்த ஓட்டத்தில் கலந்து, மூளையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும், ஆனால் சொக்லேட்டில் உள்ள மூலப்பொருட்கள் இரத்தத்தில் கலப்பதற்கு தாமதமாகும், எனவே சொக்லேட் ஒரு போதைப்பொருள் ஆகாது என Drexel University சேர்ந்த Jennifer Nasser என்பவர் தெரிவித்தார்.
2012: தோல்புற்றுநோய்
அமெரிக்காவில் 120,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சொக்லேட் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டது, இந்த ஆய்வில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்களில், 18 சதவீதம் பெண்களுக்கும், 13 சதவீதம் ஆண்களுக்கும் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என தெரியவந்துள்ளது.
ஏனெனில், இதில் உள்ள caffeine எனும் நச்சுப்பொருள் புற்றுநோயிலிருந்து காக்கிறது.
2015: இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களை சொக்லேட் கட்டுப்படுத்துகிறது. இருதயம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் மருத்துவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட கண்டங்களில் தினசரி 3.5 அவுன்ஸ் சொக்லேட் எடுத்துக்கொள்ளும் 150,000 ஆண்கள் மற்றும் பெண்களில் முன்னேற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து சொக்லேட் எடுத்துக்கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21% குறைவாகவும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29% பாதுகாக்கிறது மேலும் இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45% பாதுகாக்கிறது. பால் சொக்லேட் எடுத்துக்கொள்வதும் இருதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக