தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

உடல் எடையை எளிதில் குறைக்க!

உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பறித்தனம் படும் பெண்களுக்கு எடையை குறைக்க உதவுகிறது சும்பா நடனம்.
கொலம்பியா நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆல்பர்டோ பேட்டாபேரஸ் என்பவரால் 1990ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது தான் சும்பா நடனம்.
மிக எளிமையான உடற்பயிற்சியுடன் கூடிய நடனம், ஏரோபிக்ஸ் போன்று தோன்றினாலும் அதில் இருந்து ரொம்பவும் வித்தியாசப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.
இன்னும் தெளிவாக சொன்னால் நடனம் மற்றும் ஏரோப்பிக்ஸ் இரண்டும் கலந்து பெற்றெடுத்த குழந்தை என்று சும்பாவை குறிப்பிடலாம்.
இது பெண்களுக்கு ஏற்ற அசைவுகளுடன் கூடிய பயிற்சிதான் என்றாலும் ஆண்கள் வேலையால் ஏற்படும் சோர்வை விரட்டவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் சும்பா பயிற்சி பெறுகிறார்கள்.
இதன் மூலம் ஆரோக்கியமான உடலை பெறலாம், முதுகெலும்பை பலப்படுத்துகிறது.
உடல் தசைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் கை விரல்கள் முதல் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பலத்தை தருகிறது.
சும்பா நடனம் முழுமையடைந்த பின்னர், தியானத்துடம் நடனப்பயிற்சி நிறைவடைகிறது.
ஒரு மணிநேரத்தில் 750- 800 கலோரிகள் வரை குறைவதால் கொழுப்பை கரைந்து உடல் எடையும் குறைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக