தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

காதலர் தினம் எப்படி வந்தது என்று தெரியுமா?

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர்.

பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம். இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர். திடீரென ஒருநாள் அவன் அமைச்சர்களை அழைத்தான். ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உடனே ஒரு அறிவிப்பு செய்யுங்கள்.
ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என்றானாம்.
இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அவன் நினைத்துள்ளான்.
பாதிரியார் வேலண்டைன் அரசனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். காதலிக்கு அனுப்பிய முதல் வாழ்த்து: இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வேலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வேலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வேலண்டைன்.
இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால், முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வேலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி. வேலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார்.
ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான்‘ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். 
அன்றிலிருந்து வேலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- See more at: http://www.manithan.com/news/20160203118651#sthash.Wbyt2oPV.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக