தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 பிப்ரவரி, 2016

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவது ஏன் தெரியுமா?: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக மாறுவதற்கு அதனை உபயோகிப்பவர்கள் அடிப்படை காரணம் அல்ல என ஆராய்ச்சியாளர்கள் தற்போது வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த நவீன காலத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட சில பழக்க வழக்கங்கள் தவறாக இருந்தாலும், அதனை திருத்திக்கொள்வது மிக சிரமமான விடயமாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்கு நமது பழக்க வழக்கங்கள் முக்கிய காரணம் இல்லை என்றும், நமக்குள் இருக்கும் ‘நியாண்டர்தால் ஆதிவாசி மனிதர்களின்’ மரபணுக்கள் இன்றளவும் நமது உடலில் இருப்பதால் தான் இந்த பழக்க வழக்கங்கள் தொடர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள Vanderbilt பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பழக்க வழக்கங்கள் குறித்து 2010ம் ஆண்டில் இருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதாவது, சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆப்பிரிக்க நாடுகளில் தான் முதன் முதலாக நாகரீக மனிதர்கள் எனப்படும் ‘ஹோமோ சாபியன்ஸ்’ வாழ்ந்து வந்துள்ளனர்.
இதே காலக்கட்டத்தில், மத்திய ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளில் நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
பின்னர், நாளடைவில் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய ஹோமோ சாபியன்ஸ் ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள நியாண்டர்தால் மனிதர்களுடன் இனப்பெருக்கம் செய்துக்கொண்டனர்.
இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஹோமோ சாபியன்ஸ் மற்றும் நியாண்டர்தால் மனிதர்களின் மரபணு(DNA) மிகுதியாக காணப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் தோன்றிய நியாண்டர்தால் மரப்பணு இன்றைய நாகரீக மனிதனின் உடலிலும் நீடித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மரபணுவின் தாக்கம் தான் ஒருவரை போதைக்கு அடிமையாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல், மீள முடியாத மன அழுத்த நோயிக்கு ஆளாவது, திடீர் மாரடைப்பு/பக்கவாதம், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு இந்த நியாண்டர்தால் மரபணு தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதேபோல், மனிதர்களிடம் காணப்படும் பல குணநலன்களுக்கும் இந்த வகையான மரபணுக்களின் தூண்டுதல் தான் காரணம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இன்று வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக