தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

இளவட்டக்கல்!


அன்று மாப்பிள்ளையின் தைரியத்தைபரீட்சித்துப் பார்ப்பார்கள் இப்படிப்பட்ட கல்லை ஒரே தூக்கில் தூக்க வேண்டும்

அந்தக் காலத்தில இளவட்டக்கல் இதை ஒரே தூக்ககத் தூகுபவருக்கே பெண் கொடுப்பார்கள்,

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் மாப்பிள்ளைக்கல் என்று அழைக்கப்படுகிற இளவட்டக்கல்லைத் தூக்கினால்தான் பெண் வீட்டார், பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இளவட்டக்கல் என்பது ஊரின் மையத்தில் அல்லது ஆட்கள் அதிகமாக நிற்கக் கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். இளவட்டக்கல் தூக்கக்கூடிய ஒருவர், உடல் வளமும் மனோபலமும் மிக்கவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால்தான் அந்தக் கல்லையே தூக்க முடியும். அத்தகைய ஒருவர், தனது பெண்ணை காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றும் மனோதிடமும் உடல் வலிமையும் பெற்றிருக்கிறார் என்பதே பெண் வீட்டாரின் எண்ணம்.
அதனால், இளவட்டக்கல்லைப் பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தங்களுக்குள்ளேயே பந்தயம் கட்டிக் கொண்டு தூக்கிப் பார்ப்பார்கள். ஒருவரின் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் குறிப்பால் உணர்த்துகிறது இந்த முறை. ஒரு நாற்பது வருடங்களுக்குமுன் மிக ஒல்லியாக இருப்பவர்களும் பலசாலியாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய வேலை. அதனால், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். அதனால் உடல் மெலிந்தோர், உடல் பருத்தோர் என்ற வித்தியாசம் இன்றி பலரும் உடல் வலிமை மிக்கவராகவே இருந்தார்கள்.

காளை மாட்டை அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விளையாட்டுக்களில் வீரத்தை வெளிப்படுத்தும் முறை பெரும்பாலும் கல்யாணத்திற்கு காத்திருக்கும் அல்லது தயாராயிருக்கும் காளையர்களுக்கான ஒரு போட்டி. அதிலும் இளவட்டக்கல் என்பது லேசுப்பட்டதல்ல. அதைத் தூக்கும் முறையைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கே மூச்சு முட்டிவிடும்.

முதலில் குத்தவைத்து உட்காருவது போல உட்கார்ந்துகொண்டு இளவட்டக்கல்லை இரு கைகளாலும் இறுகப் பிடித்து உடம்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், முழங்காலில் தூக்கி வைக்கும்போது சிறிது இடைவெளி கிடைக்கும். இப்போது மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு மெல்ல எழ முயற்சிக்க வேண்டும். உடல் சற்று நிமிர்ந்தவுடன் நெஞ்சுப்பகுதிக்கு கல்லை அங்குலம் அங்குலமாக மேலேற்றி, வலது புறத்திலோ அல்லது இடதுபுறத்திலோ கல்லை உருட்டி ஏற்றிவிடவேண்டும். அவ்வளவுதான். ஆனால், முதன்முறை அப்படிக் கல்லை மேலேற்றும்போது நெஞ்சுப்பகுதியில் சடசடவென்று எலும்புகளின் சத்தம் கேட்குமாம். மார்பிலிருந்து தோள்பட்டைக்கு நகர்த்தும் போதுதான் பலரும் தோல்வியடைந்து விடுவார்களாம். சற்று மூச்சடக்கி தூக்கிவிட்டால் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து, அருகிலுள்ள கோயிலை வலம் வந்து கீழே போடுவார்களாம். சிலர், அருகில் உள்ள ஊருணியைச் சுற்றி தமது வீரத்தை வெளிப் படுத்துவார்களாம். ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லச் சொல்ல, கேட்பவரின் மனம் கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரின் நிலைக்குத் தள்ளப்படும்.

தோல்வியடையும் சிலரும், முதன்முறையாக முயற்சி செய்வோரும் ஆளில்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிப் பார்ப்பதுண்டு. சில பீமர்கள் ஒரே மூச்சில் தூக்கிவிட்டு அடுத்து என்ன என்பது போலவும் பார்ப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக