தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 11, 2015

சர்க்கரை நோய்... ஏன், எதனால், எப்படி..வருகிறது!

எங்க தாத்தாவுக்கு சுகர்’ என்றது முந்தைய தலைமுறை. ‘எங்கப்பாவுக்கு சுகர்’ என்றது நேற்றைய தலைமுறை. `எனக்கும் சுகர்' என்கிறது இளையதலைமுறை.வயோதிபர்களின் நோயாக இருந்த சர்க்கரை நோய், இன்று நடுத்தர வயதில் இருந்தே எதிர்பார்க்கப்படும் நோயாக பரிணாம வளர்ச்சி  அடைந்துள்ளது.
`உங்க வீட்டுக்கு பேப்பர் வந்துடுச்சா?’ என்று விசாரிப்பது போல, ‘எனக்கு சுகர் வந்துருச்சு... உங்களுக்கு?’ என்று மக்கள் ஒருவரை ஒருவர் சாதாரணமாக விசாரித்துக்கொள்ளும் அளவுக்குப் பெருகிவிட்டது சர்க்கரை நோய்.
சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.
ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்சினையை ஏற்படுத்தும்.
இதையே ‘சர்க்கரை நோய்’ என்கிறோம்.
இதை நோய் என்பதைவிட குறைபாடு என்று கூறுவதே சரி! ஆம், இது சரிசெய்துகொள்ள கூடிய குறைபாடே!  உணவுக் கட்டுப்பாடு மூலமாக சரிசெய்துவிடலாம். ஆனால், கட்டுப்பாடு இல்லாவிட்டால், அது குணப்படுத்தமுடியாத நிலைக்குக் கொண்டுசென்று, ஆளையே காலி செய்துவிடும்.
பெற்றோரில் யாருக்காவது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வர 40% வாய்ப்புள்ளது. பெற்றோர் இருவருக்கும் இருந்தால், 90% வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயைக் கவனிக்காமல் விட்டால்... 80 - 90 சதவிகிதம் இதயம், சிறுநீரகம், கண் பாதிக்கப்பட்ட பின்புதான் விஷயமே நமக்குத் தெரிய வரும். கண் பார்வை பாதிப்பு, காலில் புண், வீக்கம், மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அதையும் தாண்டும்போது கை, கால், கண் போன்றவற்றை அகற்றும் நிலை ஏற்படும்.
இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், ‘சைலன்ட் கில்லர்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக் கூடாது’ என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்று தனியாக ஒன்று தேவையே இல்லை. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க் கரையை எடுத்துக்கொள்ள தேவையில்லை’’
சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் ஒரு தடவையும், மற்றவர்கள் ஆண்டுக்கு ஒருதடவையும் தவறாமல் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகமிக நல்லது.
30 வயதுக்கு மேல் அனைவரும் சுகர் டெஸ்ட் செய்துகொள்வது அவசியம்.

No comments:

Post a Comment