தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 டிசம்பர், 2015

கறிவேப்பிலையில் இவ்வளவு சத்துக்களா?

பலருக்கும் கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும் என்று தான் தெரியும்.
ஆனால் கறிவேப்பிலையைக் கொண்டுபல பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணலாம்.
கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் விட்டமின்களான ஏ, ஈ, சி மற்றும் பி போன்றவை நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள்
* அசிடிட்டி பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள்தீரும்.
* வயிறு உப்புசத்துடன் இருந்தால், மோரில் கறிவேப்பிலையை அரைத்து போட்டுக் கலந்து குடித்து வர, வயிற்றுஉப்புசம் குறையும்.
* கறிவேப்பிலை சாற்றில் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், சிறுநீரக பாதையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.
* கடுமையான நோய்த்தொற்றினால் உண்டாகும் வயிற்றுக்கடுப்பை சரிசெய்ய கறிவேப்பிலையை உட்கொண்டுவருவது நல்லது.
* ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் அகல வேண்டுமெனில், கறிவேப்பிலையின் குச்சியைக் கொண்டு பற்களை துலக்கிவர வேண்டும். இதனால் ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் பளிச்சென்று மாறும்.
* கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வைப் போக்குவதற்கு எலுமிச்சை ஜூஸில் வெல்லம் மற்றும் சிறிது கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர, காலைச் சோர்வு நீங்கும்.
* இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க, கறிவேப்பிலை டீ உதவும். கறிவேப்பிலையில் இரத்தசர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும் நார்ச்சத்து உள்ளது. எனவே அதனை டீயாகவோ அல்லது வெறும்வயிற்றில் அப்படியே பச்சையாகவோ சாப்பிட்டு வருவது நல்லது.
* முடி கருமையாக வளர வேண்டுமானால், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல்சாப்பிடுவதோடு, கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவிவாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக