தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 அக்டோபர், 2015

கலோரி குறைவாக உள்ள காய் எது தெரியுமா?

காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
அழகு ஆரோக்கியம் என இருவித பயன்களை வழங்கும் வெள்ளரிக்காய் பற்றி பார்ப்போம்,
மருத்துவ பயன்கள்
வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும்.
வெள்ளரிக்காயில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
இதனால் அதை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் விட்டமின் ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது.
இதனை இன்னும் சத்துள்ளதாக மாற்ற, அதனை கீரை மற்றும் கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள். மேலும் வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்.
ஏனென்றால் தோளில் தேவையான அளவு  விட்டமின் சி உள்ளது. அதிலும் அன்றாடம் தேவைப்படும் அளவில் 12% அடங்கியுள்ளது.
அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும்.
வெள்ளரிக்காயில் செகோய்சொலாரிசிரேசினோல், லாரிசிரேசினோல் மற்றும் பினோரெசினோல் அடங்கியுள்ளது. இந்த மூன்று பொருட்களுக்கும் கருப்பை, மார்பகம் புற்றுநோய்களை எதிர்க்கும் தன்மை உள்ளது.
வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும்.
கரு வளையம் மறைய
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
வெள்ளரிக்காய் சாதம்
வெள்ளரிக்காயை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்,
செய்முறை
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.
நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரிதுருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள்.
அந்தக் கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
பயன்கள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் வெள்ளரிக்காய் சாதம் சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக