தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, October 31, 2015

தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதனை அன்றாடம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்,
சத்துக்கள்
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
மருத்துவ பயன்கள்
உடல் சக்தி
க்ளுகோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்கும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் விட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்
பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.
செரிமானம் சரியாகும்
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.
சருமத்திற்கு நல்லது
பேரிச்சம்பழத்தில் நிறைய விட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இரத்த சோகைக்கு தீர்வு
பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும்.
சாப்பிடும் முறை
உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும்.
பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது.
பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து 'டேட்ஸ் சிரப்' தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது.

No comments:

Post a Comment