தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, October 26, 2015

சூரிய சக்தியில் இயங்கும் இராட்சத விமானம்

பல்வேறு நாடுகள் இராட்சத விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சீனா சத்தமின்றி தனது சூரிய சக்தியில் இயங்கும் இராட்சத விமானம் ஒன்றினை கடந்த வாரம் பறப்பில் ஈடுபடுத்தி பரீட்சித்துள்ளது.
சூரிய சக்தியில் இயங்கக்கூடியதாக இருக்கும் இவ் விமானத்தில் சூரிய சக்தியை மின் சக்தியை சேமிக்கக்கூடிய நவீன ரக மின்கலமும் காணப்படுகின்றது.
இம் மின்கலமானது ஒருமுறை சார்ஜ் செய்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
சீன மொழியில் Yuanmeng (கனவு) எனும் பெயரிடப்பட்டுள்ள இவ் விமானத்தின் நீளம் 75 மீற்றர்களாகளாகவும், உயரம் 22 மீற்றர்களாகவும் காணப்படுகின்றதுடன், கொள்வளவானது 18,000 கனமீற்றர்களாகவும் இருக்கின்றது.
இவ்விமானம் 4.5 தொடக்கம் 6.3 மெட்ரிக் தொன் வரையான பொருட்களை காவிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 48 மணிநேரம் பறப்பில் ஈடுபடுத்தப்பட்டு வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது தரைமட்டத்திலிருந்து 20 கிலோமீற்றர்கள் உயரம் வரை விமானம் பறந்துள்ளது.

No comments:

Post a Comment