தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 அக்டோபர், 2015

கடலில் மாசுபடிந்துவிட்டதா? இதோ சுத்தம் செய்யும் நீச்சல் ஆடை (வீடியோ இணைப்பு)

கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்யும் வகையில் நீச்சல் ஆடை ஒன்று வடிமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் ஆடை கடலில் பரவியுள்ள எண்ணெய் மற்றும் இரசாயன கழிவுகளை 25 மடங்கு உறிஞ்சும் தன்மை வாய்ந்தது.
இது ‘ஸ்பான்ஜ்’ போன்ற தன்மையுள்ள துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் 3டி பிரிண்ட்கள் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அலை போன்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத துணி வகையில் குறைந்த செலவில் இது தயாராகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சார்பில், பொறியியல் பேராசிரியர் மிஹ்ரி ஒஸ்கானின் திட்டத்தின் அடிப்படையில், வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை தொழில்நுட்பங்கள் தொடர்பான போட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக