தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, October 24, 2015

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர் சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளால் புற்றுநோய் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசர வாழ்க்கை முறையாக  மாறியுள்ளது.
இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணுகிறோம்.
பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின்(Carcinogen) புகலிடமாக உள்ளது.
பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.
பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரித்தானியாவில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம், ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன.

No comments:

Post a Comment