தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 அக்டோபர், 2015

ஆட்டிறைச்சியில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன?


அசைவ உணவுகளில் ஒன்றான ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.
ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள்:
விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள்:
ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது.
இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும்.
அதில் உள்ள பி விட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.
ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால், அவர்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.
ஆட்டிறைச்சியில் உள்ள நியாசின் என்னும் விட்டமின், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆற்றலை மேம்படுத்தும்.
படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட, மட்டன் அதிகம் கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு அதிகரித்து, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து கிடைக்கிறது. மற்றும் இதை சாப்பிடுவதன் மூலம் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது.
ஆட்டிறைச்சி சூப்
ஆட்டிறைச்சி சூப்பில் நோயெதிர்ப்பு சக்தி உள்ளதால் நோயாளிகள் குடிப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் எலும்புகள் வலுவடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக