தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, September 18, 2015

மூன்றே நாட்களில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் பீட்சா, பர்கர்!

பர்கர், பீட்சா போன்ற உணவுகளால் மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிறப்பான உடல்நலம் கொண்ட 6 ஆண்களை தெரிவு செய்தனர்.
இவர்கள், வாரத்திற்கு 50 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 35 சதவிகிதம் கொழுப்பு, 15 சதவிகிதம் புரதம் மற்றும் ஒரு நாளைக்கு 6000 கலோரிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இவர்கள் உடற்பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது, இந்நிலையில், இந்த ஆண்கள் கலோரிகள் கொண்ட உணவுக்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை அன்றாடம் உணவாக எடுத்துக்கொண்டனர்.
இதன் காரணமாக இவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டதால் உடலில் உள்ள குளுகோஸை செல்கள் உறிஞ்சாமல் இவை நேரடியாக ரத்தத்தில் கலந்துவிட்டது.
பீட்சா, பர்கர் தயாரிக்க பயன்படும் மாவில் உள்ள அதிக சர்க்கரை மூன்றே நாட்களில் நீரிழிவு நோயை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் ஏற்பட வழியிருந்தால், அதே வேகத்தில் அதனை குணமாக்கிவிடவும் வாய்ப்புள்ளது என ஆராய்சியாளர்கள் அடுத்த ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.
 

No comments:

Post a Comment