தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, September 13, 2015

முதுகு, இடுப்பு வலியால் அவஸ்தைப்படுறீங்களா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் !

உலகளவில் பெரும்பாலான மக்கள் முதுகுவலி, கழுத்து மற்றும் இடுப்பு வலியால் அவஸ்தைப்படுகின்றனர்.
குனிந்து நிமிந்து வேலை செய்பவர்களை விட, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் தான் அதிகம்.
எனவே தினமும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 20 முறை குனிந்து உங்களது காலின் பெருவிரலை தொடுங்கள், இதனை செய்து வந்தால் முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும்.
நிற்கும் போது, இருக்கையில் அமர்ந்து வேலை செய்யும் போதும் நேராக இருக்க வேண்டும், வளைந்து நெளிந்து இருக்க கூடாது.
இதேபோன்று தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல், அரைமணி நேரத்திற்கு ஒருமுறை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும்.
காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, கையை முன் பின்னாகச் சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.
இது தவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்யும்போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது.
மேலும் படுக்கும் போதும் வளைந்து படுப்பதை விட, நேராக அல்லது பக்கவாட்டில் படுத்து உறங்கலாம்.
தினமும் 20 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி செய்ய வேண்டும், இதனால் கொழுப்புகள் கரைவதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுபடுவது நல்லது, இது உற்சாகத்தையும் தரும்.
வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள்.
பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.
கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment