தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, September 28, 2015

உங்கள் கண்கள் பிங்க் நிறத்தில் இருக்கிறதா? காரணம் என்ன?

கண்களின் வெண்படலங்கள் சிவப்பு நிறமாக மாறும் போது கண்கள் பிங்க் நிறத்தில்(Pink Eye) காணப்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களில் வீக்கம் ஏற்படும்.
இவை பொதுவான ஒன்றாகும், இந்த பிங்க் நிற கண்கள் எவ்வித மருத்துவ சிகிச்சையும் இன்றி 7 முதல் 10 நாட்களுக்குள் சரியாகிவிடும்.
காரணம் என்ன?
1.வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படுகிறது.
2.கண்களில் கண்ணீர் இல்லாமல் கண்கள் உலர்ந்து போதல், அல்லது அதிகமான சூரிய ஒளி, அளவுக்கதிகமான காற்றின் காரணமாக ஏற்படுகிறது.
3.இரசாயனங்கள், தீப்பொறிகள், புகைமண்டலங்கள் கண்களில் படும்போது இவை ஏற்படுகின்றன.
4.வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களினால் ஏற்படும் இந்த தொற்று விரைவில் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
5.கைகளை ஒழுங்காக கழுவாமல், அதனை கண்களில் வைக்கும்போதுதான் முக்கியமாக இந்த தொற்று ஏற்படுகிறது.
6.பிங்க் நிற கண்கள் அதிகமாக அடினோவைரஸின்(adenovirus) தொற்றால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
1.கண்களின் வெண்டலம் சிவப்பாக இருத்தல்.
2.கண் இமைகள் வீங்கி இருத்தல்.
3.கண் இமைகள் நமைச்சல் அல்லது எரிவது போன்ற ஒரு உணர்வை தரும்.
4.கண்களில் இருந்து அளவுக்கதிகமாக கண்ணீர் வடிதல்.
5.7 நாட்களுக்கு காணப்படும் இந்த தொற்றின் தாக்கம் மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் இதன் தாக்கம் தீவிரமாக உள்ளது என்று அர்த்தம்.
தடுப்பு முறைகள்
1.எந்தவொரு வேலை செய்வதற்கும் முன்பும், செய்து முடித்த பின்பும் கைகளை கழுவ வேண்டும்.
2.கண்களுக்கு நீங்கள் போடும் மேக்கப் பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
3.இராசயனங்கள் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்துகொள்ளுங்கள்.
4.இந்த பிங்க் நிற கண்கள் பிரச்சனைக்கு எவ்வித மருத்துவமும் தேவையில்லை, இவற்றின் தாக்கம் வந்துவிட்டால் மேலே கூறப்பட்டவைகளை பின்பற்றி காத்துக்கொண்டாலே போதுமானது.

No comments:

Post a Comment