தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை: உஷார்!

ஒரு சில பதிவுகள் நம்முடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.
 அதிலும் இந்த பதிவிற்கு "1 என கமெண்ட் செய்யுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்று வாசகங்கள் தாங்கிய இணைப்புகளை அதிகம் பார்த்திருக்கிறீர்கள்.
நீங்களும் ஆர்வத்தில் லைக் மற்றும் கமெண்ட் பொத்தான்களை கிளிக் செய்வீர்கள். ஆனால் எதும் நடக்காது. பின்னர் தான் நீங்கள் இது ஏமாற்று வேலை என்று உணர்வீர்கள்.
ஆனால் நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும்.
நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங்கள் நண்பர்களின் டைம்லைனிலும் தோன்றும் அவர்களும் இதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.
இது மட்டுமல்லாது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமான பதிவுகளும் உலா வருகிறது.
"என்னுடைய சகோதரிக்கு இதயத்தில் புற்றுநோய், எனது தோழிக்கு கேன்சர், உதவுங்கள்!" என்ற வாசகத்தோடும், மருத்துவமனையில் இருக்கும் ஒரு பெண்ணின் படமும் இருப்பது போன்றும் பதிவுகள் அடிக்கடி வரும்.
இதற்கான காரணங்கள் என்ன?
அதிகப்படியான லைக் மற்றும் கமெண்டுகளை மையமாக வைத்தே ஃபேஸ்புக்கின் நிரலாக்கம் அமைந்திருக்கிறது. இதனாலே ஃபேஸ்புக்கும் இது போன்ற பதிவுகளை பிரபலப்படுத்தும். இதனால் இத்தகைய பதிவுகள் அதிகரிக்கின்றன.
ஃபேஸ்புக்கில் ஒரு பக்கமோ, பதிவோ அதிகப்படியான லைக்குகள் பெற்றால் அதில் எவ்வித நிதி சம்பந்தமான பயனும் இல்லை. எனவே இது போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி இருக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக