தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, September 8, 2015

முகத் தழும்புகள் மறைய வேண்டுமா?



சிலருக்கு விபத்து, அலர்ஜி போன்றவைகள் மூலம் முகத்தில் தழும்புகள் ஏற்படக்கூடும்.
எனினும் கவலை வேண்டாம் அவற்றை எளிதாக போக்க பல வழிகள் உள்ளன.
இந்த முறைகள் உங்களின் தழும்புகளை மறைய செய்வதுடன் முகத்தையும் அழகாக மாற்றும் என்பதால் அனைவரும் இதனை முயற்சி செய்யலாம்.
* சந்தனப் பவுடருடன் பன்னீர் அல்லது பாலை கலந்து, முகத்தில் பூசி வரவேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
* இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்னர் தண்ணீர் அல்லது பாலில் பாதாம் பருப்பை ஊற வைக்கவேண்டும்.
பின்னர் அதன் தோலை உரித்து அரைக்க வேண்டும். அதனுடன் பன்னீர் கலந்து தழும்புகளின் மீது தடவி வந்தால் நாளடைவில் சரியாகும்.
* ஆலிவ் எண்ணெய்யில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. தழும்புகளில் மீது ஆலிவ் எண்ணெய்யை தடவி பின்னர் மெல்லிய சூட்டில் ஆவி பிடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மற்றும் முகத்தில் உள்ள துளைகள் மறையும்.
* எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி தழும்புகளை மறைய செய்யும் ஆற்றல் நிறைந்தது. எனவே எழுமிச்சை சாற்றை முகத்தில் பஞ்சை கொண்டு ஒற்றி எடுத்துவந்தால் நல்ல பலன் தரும்.
* பேக்கிங் சோடாவுடன் நீரினை கலந்து தழும்புகளின் மீது ஸ்கரப் செய்யுங்கள். அதனை நன்றாக தேய்க்க வேண்டும்.
பின்னர் சில நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் நாளடைவில் உங்கள் முகத் தழும்புகள் மறைந்துவிடும்.

No comments:

Post a Comment