தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 ஆகஸ்ட், 2015

அழிவை ஏற்படுத்தும் சாசேஜ், ஜங்க் உணவுகள்!

சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள்.
இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.
அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள ரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும்.
அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம்.
அதுமட்டுமல்லாது, டோப மைன் அறிவுத்திறன், விழிப் புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
அதேபோன்று சாசேஜ் உணவுகளால் மனிதன் அதிகமான ஆரோக்கியமான பிரச்சனைகளை சந்திக்கிறான்.
சாசேஜ் அதிகம் உட்கொள்வதால் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஜேர்மனி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற 4,500 நபர்களில் பெரும்பாலானோர் பெருங்குடல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது புற்று நோய்க்கான அறிகுறியென தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், புதுவகை உணவு பழக்கவழக்கங்களால் நோய் வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டனர்.
மேலும் இறைச்சி போன்ற உணவு வகைகளை நெருப்பிலிட்டு வாட்டும்போது வெளியேறும் புகையை சுவாசிப்பதும் ஆபத்து என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக