தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 21, 2015

வளியிலிருந்து கார்பன் பைபர் : அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

பாரம் குறைந்ததும் உறுதியானதுமான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உதவும் கார்பன் பைபரினை வளியிலுள்ள காபனீரொக்சைட்டினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய சக்தியில் இயங்கும் முறைமை ஒன்றினுள் உள்ள மின்வாய்களிக்கு இடையில் கார்பன் பைபர் துணிக்கைகள் மெதுவாக உருவாகிவருவதாகவும், இது ஒரு மணிநேரத்தில் 10 கிராம்கள் வரை உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்செயல் முறையானது கார்பன் பைபர்களை உருவாக்குவதற்கான செலவு குறைந்த முறையாகக் காணப்படுவதுடன், இதன் மூலம் காபனீரொக்சைட்டினால் வளி மாசடைவதையும் குறைக்க முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment