தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, August 23, 2015

முழுமையான சூரிய சக்தியில் செயல்படும் உலகின் முதலாவது விமான நிலையம்



இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கொச்சின் விமான நிலையமானது அடுத்த வருடம் மே மாதத்திலிருந்து முற்றுமுழுதாக சூரிய சக்தியில் இயங்கவுள்ளது.
இதன் காரணமாக குறித்த விமான நிலைய பகுதியில் அடுத்த 25 வருடங்களில் காபன் மாசானது 300,000 தொன்களால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் இத் திட்டத்தில் சுமார் 46,150 சூரியப் படலங்கள் இணைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் 10,000 வீடுகளுக்கு வழங்கக்கூடிய மின்சக்தியை உருவாக்க முடிவதுடன், 3 மில்லியன் மரங்களை நாட்டுவதனால் கிடைக்கக்கூடிய சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment