தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஆகஸ்ட், 2015

நீங்கள் செல்போனை பயன்படுத்திக்கொண்டே சாலையில் நடப்பவரா?


இந்த நவீன காலத்தில் மனிதர்கள் நடக்கவே நேரமில்லாமல் பறந்துகொண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் சந்தைக்கு வரும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களை இயந்திரங்களாய் மாற்றி விட்டன என்று கூட சொல்லலாம்.
தற்போது மனிதர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய கற்றுகொண்டனர். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது அல்லது அலைபேசி உபயோகிப்பது, என்று பல உதாரணங்கள் கூறலாம்.
அதில் பரவலான ஒன்று கைப்பேசியை பயன்படுத்திகொண்டே நடப்பது. பரவலாக நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
மிகுந்த மக்கள் நெரிசல் அல்லது போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைப்பேசியில் யாருக்காவது குறுங்செய்தி அனுப்பியபடி செல்பவர்களை பார்க்கும் போது நமக்கு எரிச்சல் தான் வரும்.
ஆனால் சாலையில் சாதாரணமாக நடப்பவர்களை விட கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு நடப்பவர்கள் மிகவும் கவனமாக செயல்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
மற்றவர்களை விட நடப்பதற்கு இவர்கள் அதிக நேரம் எடுத்துகொண்டாலும் தடுப்பு எதாவது இருந்தால் அதை தொலைவிலேயே உணர்ந்துகொள்ளும் தன்மை உடையவர்களாக உள்ளனர்.
எனினும் இவர்களால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படத்தான் செய்கிறது. இதற்கு தீர்வாக பெல்ஜியம் உலகிலேயே முதல் நாடாக கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு தன் பாதை கைப்பேசி பயன்படுத்தாதவர்களுக்கு தனி பாதை என அண்ட்வெர்ப் நகரில் உள்ள சாலைகளில் அமைத்துள்ளது.
இதன் மூலம் கைப்பேசிகளை பயன்படுத்துபவர்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும் என அந்நாடு நம்புகிறது.
எனினும் இவற்றை கட்டுபடுத்துவது நமது கையில் தான் உள்ளது. ஆம் நமது “கை”யில் தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக