தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

பற்களை சரியாக சுத்தம் செய்யாதவரா நீங்கள்?

பற்கள் துலக்குவதை சரியான முறையில் பின்பற்றாமல் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
1. பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் முட்கள் மென்மையாகவும், தலைப்பகுதி மிகவும் பெரியதாக இல்லாமல் வாயின் மூலை முடுக்குகளில் சென்று வாயில் தங்கியுள்ள உணவுத்துகள்களை வெளியேற்றும் அளவிலான டூத் பிரஷ்ஷை வாங்க வேண்டும்.
2. பற்கலை அழுத்தி தேய்த்தால், ஈறுகள் புண்படுத்தப்படும். ஈறுகள் அதிகமாக புண்பட்டால், அதனால் ஈறுகளில் தொற்றுகள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்படக்கூடும்.
3.பற்களை குறைந்தது காலையில் 2 நிமிடங்களும், இரவில் இரண்டு நிமிடங்களும் துலக்கினால் போதுமானது.
4. பேஸ்ட் வாங்கும் முன் அதில் புளூரைடு, ட்ரைக்ளோசன், ஜைலிட்டால் போன்ற பொருட்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இவை இருந்தால், அந்த பேஸ்ட்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.
ஆனால் புளூரைடு நிறைந்த பேஸ்ட் தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் இது தான் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
5. எப்போதும் பற்களைத் துலக்கிய பின், வாயை சுத்தமான நீரில் குறைந்தது 5 முறையாவது நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களைத் துலக்கி வெளிவந்த துகள்கள் வாயில் இருந்து முற்றிலும் வெளியேறாமல், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதுவே நீடித்தால், ஈறுகளும் பாதிக்கப்படும்.
6.பற்களை துலக்கும் போது முன்புறம் மட்டும் நன்கு தேய்ப்பார்கள். ஆனால் முன் பற்களை விட, கடைவாய்ப் பற்கள் தான் உணவுப் பொருட்களை உடைப்பதால், அவற்றில் உணவுத்துகள்கள் அதிகம் மாட்டியிருக்கும்.
எனவே பற்களைத் துலக்கும் போது, கடைவாய்ப் பற்களின் மீது சற்று அதிக கவனம் செலுத்துங்கள்.
7. மௌத் ப்ளாஷ் பயன்படுத்துவதன் மூலம் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள சிறு உணவுத் துகள்களை வெளியேற்றிவிடலாம்.
8.நாக்குகளின் மேல் உள்ள வெள்ளைப்படலமும் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். எனவே நாக்கினையும் சுத்தம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக