தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஆகஸ்ட், 2015

திருமண மந்திரங்கள் ஆபாசமா?!இனப்பெருக்கம் ஆபாசமா?!பிறப்பின் நோக்கம் என்ன !?

 


சபேசன் said:
திருமண மந்திரங்கள்!
தமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.
இந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.
திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.
''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.
நீங்கள் மேலே தந்திருக்கும் திருமண மந்திரத்தில் சொற்பிழை, பொருட்பிழை இரண்டும் இருக்கிறது.
மந்திரங்களை மட்டந்தட்டுவதில் உள்ள உங்கள் ஆர்வம் புரிகிறது. அப்படி மட்டம் தட்டுவதற்காகவே நீங்கள் மேற்கோள் காட்டும் மந்திரங்களை முக்கால் மந்திரங்களாக எழுதமாமல் சொற்பிழை இல்லாத முழுமந்திரங்களாக எழுத முயற்சி செய்யுங்கள். :)
மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.
இதன் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
  Quote
அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.
இந்த மந்திரத்தில் ரோமம் பற்றி எல்லாம் எங்கும் குறிப்பிடப்ப்டவில்லை.
(அது மட்டும் அல்ல பெண் உடலில் எத்தனையோ இடங்களில் ரோமம் இருக்கிறதே! ஏன் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டும்?)
பகுத்தறிவு என்பார்கள் - எதையும்
பகுத்தறிய மாட்டார்கள்
பகைத்தறிவு போனதனால்
மிகைத்திரண்டு வந்ததடா
மற்ற மந்திரங்களுக்கும் நேரம் கிடைக்கும் நேரம் நிச்சயம் விளக்கம் எழுதுகிறேன். பகுத்தறிவு பிரசாரம் என்ற பெயரால் யாழ்கள வாசகர்களுக்கு தவறான தகவல் தருவதை இனியாவது தவிர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

http://www.yarl.com/forum3/topic/16197-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/


  Quote
இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)
"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."
இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.
இன்னும் ஒரு மந்திரம்:
"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா?
திருமணம் என்பதே.. ஒரு ஆபாச நிகழ்வுதான். அதை ஆபாசமாக கருதாமலும் பார்க்க முடியும். ஆனால் உலகில் 98% பேரும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை குட்டியோடு அலைவதைப் பார்க்கையில்... அது ஆபாச நோக்கோடுதான் நோக்கப்படுவது புலனாகிறது. ஆனால் அதன் அர்த்தம் வேறு. அதை விடுவோம்..!
மக்கள் மத்தியில் கடவுள் மீது நம்பிக்கை மட்டுமல்ல.. ஒரு பயமும்.. பக்தியும்..மதிப்பும் இருக்கிறது. மக்கள் நம்பும் அல்லது பயப்பிடும்.. அல்லது மதிப்பளிக்கும் அந்தக் கடவுளை வைத்து நடைமுறை வாழ்க்கைக்குரிய விடயங்களுக்கு விளக்கமளித்து விட்டால்.. மக்கள் அதற்கு கட்டுப்படுவார்கள் என்பதை புராண இலக்கியங்களில் தெளிவாகக் காணலாம். சிலர் புராண இலக்கியங்களை மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின் பிரதிபலிப்பாக நோக்குவது தவறு. புராண இலக்கியங்கள் மக்களின் வாழ்வை கற்பனை கலந்து பிரதிபலிப்பவை. அதற்குள் கடவுள் இருப்பது மக்களின் மனதை எவ்வாறு ஒரு விடயத்துக்குள் ஆழ்த்துவது என்ற நோக்கில் அன்றி.. அவைதான் கடவுட் கோட்பாடுகள் அல்லது மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் அல்ல. அவை தவறான புரிதல்கள். மக்களுக்கு மதக் கோட்பாடுகள் இலகுவாகப் புரியாததால்.. கடவுளை நடைமுறை வாழ்க்கைக்குள் பிரதியீடு செய்து மக்களின் வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை விதைக்க முற்படுகின்றனர் என்பதையே மேலுள்ள மந்திர உச்சாடணம் விளக்குகிறது.
சபேசன் அளவுக்கு மிஞ்சி பெரிய தோற்றம் காட்டுகிறார். 18 வயதுக்கு உட்பட்டோர்தான் படிக்கனும் இவற்றை என்று. 11 வயதிலேயே மனித இனப்பெருக்கம் பற்றி தெளிவாக விளக்கப்படுகிறது. எனவே இதில் சபேசனுக்கு கவலை தேவையில்லை.
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு.. பிரதானமாக மூன்று பகுதிகளை உடையது என்பது தவறல்ல. அது உண்மையே. கருப்பை (uterus).. யோனி மடல் (vagina).. வெளிப்புற உறுப்புகள் vulva.
ஆண் பெண் உடலுறவின் போது ஆண்களைப் போலன்றி பெண்கள் பாலுணர்வுத் தூண்டலுக்கு இலக்காக அதிக நேரம் எடுப்பதுடன் அவர்களின் பாலுணர்வுத் தேவை என்பது ஆண்களை விட அதிக நேரத்துக்குரியது. அதுமட்டுமன்றி ஆண் பெண் பாலுறுப்புக்கள் கலப்படைவதற்கு முன் தயார் நிலைக்கு வர வேண்டும். அதில் கூட பெண்களுக்கு அதிக நேரம் காலம் அவசியம். அப்படி நிகழாத போது.. பெண்களில் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடையவோ.. அல்லது வலி ஏற்படவோ.. அதிக சந்தர்ப்பம் உண்டு. பெண்களின் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடைவதால் (குருதிப் போக்குக்கு உள்ளவதால்) அதிக நோய்த்தொற்றலுக்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாத நிலையும் தோன்றலாம். இப்படிப் பலர் வைத்தியசாலைக்கு வருகிறார்கள்.. இன்றைய உலகில் கூட.
அதனால் தான் ஆண்கள் உடலுறவின் போது விலங்குகள் போல முரட்டுத்தனமாகப் புணராமல்.. பெண்களின் உணர்வுநிலைகளை அறிந்து புணர வேண்டும் என்பதை.. விளக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இதை மண மேடையில் இருக்கும் மணமக்களுக்கு புத்தகமும் கையுமா சொல்ல முடியுமா சார்..???! அதுவும் மனித உடலமைப்புப் (Human anatomy) பற்றிய அறிவு தெளிவாக அறிவியல் மூலம் இனங்காட்டப் படாத ஒரு காலத்தில். இன்று நிலை வேறு.
அதுதான் திருமணம் என்ற நிகழ்வின் போது மந்திரம் மூலம் வழிகாட்டுகிறார்கள். கடவுளை வைத்து விளக்கமளிக்க முற்படுகின்றனர். இதில் என்ன தப்பு. கடவுள் சமூகத்துக்கு நல்வழி காட்டத்தானே மனிதனால் பாவிக்கப்படுபவர். நீ எப்படி கடவுளை மதித்து.. உருகி வணங்கிறாயோ.. உணர்வுகளை செலுத்திறாயோ.. அதைப் போல் நடந்து கொள்ளப்பா எங்கிறார்கள். முன்னர் எல்லோரும் சமஸ்கிரதமும் படிப்பர். அதனால் எல்லாத் தம்பதியருக்கும் இது புரியும் என்பதால் சமஸ்கிரதம் மூலம் சொல்கின்றனர். ஆனால் இன்று அது பலருக்கு விளங்க வாய்ப்பில்லை. இதை தமிழில் காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் சார்ந்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.
கருத்தடை சாதனங்களுக்கும்.. கொண்டோம்களுக்கும் நாம் இன்று விளம்பரம் செய்யல்லையா. அதுபோல்.. அன்று திருமணமாகும் சம்பதியருக்கு அடிப்படைப் பாலியல் கல்வியை இப்படியான மந்திர உச்சாடணம் மூலம் ஊட்டியுள்ளனர். கடவுள் என்பது அங்கு கையாளப்பட்ட ஒரு காரணி மட்டுமே அன்றி.. அதில் தான் கடவுள் உள்ளார் என்பதல்ல விளக்கம். மத அடிப்படை கோட்பாடு என்பது வேறு.. கடவுள் என்ற அந்த பதநிலையை மக்களுக்கு அறிவூட்டப் பயன்படுத்தும் நிலை என்பது வேறு.
அரைகுறையா விளங்கிட்டு வந்து.. அரைகுறையா.. ஆராயாதீர்கள்..! ஒரு முழுமை நோக்கி விடயங்களை நோக்குங்கள். தெளிவு பிறக்கும். வேண்டிய மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களை பழமைக்குள் இருந்து தேட வேண்டிய சந்தர்ப்பமாவது எழுவது புரியும்.
இன்றைய உலகிலும் இது கட்டாயம். திருமணமாகும் தம்பதியருக்கு பாலியல் அறிவு மட்டுமன்றி பிறப்புரிமையியல் (genetics) அறிவும் அவசியம். புலம்பெயர்ந்த நாட்டில் கூட பல தமிழர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பல பாரம்பரிய நோய்களும்.. பிறப்புரிமை சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. பல திருமண முறிவுகளுக்கு வன்முறைத்தனமான பாலியல் அணுகுமுறையும் காரணம் என்பதை திருமண முறிவு வழக்குகளைப் பார்த்தால் புரியும்.
இதை அடிப்படை பாலியல் பிறப்புரிமையியல் அறிவின்றி.. இருக்கும்.. திருமணமாகும் தம்பதியருக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப் போறீர்கள் என்று சிந்தியுங்கள். அன்று மந்திரம் மூலம் சொன்ன பாலியல் கல்வி சார்ந்த ரகசியத்தை பழிக்கிறீர்கள்.. இன்று அதே விடயமானது அவசியமானதாகி உள்ள சூழலில் அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு வழி சொல்லுறீங்களும் இல்ல.
அநாவசிய கர்ப்பமாதல்.. கருக்கலைப்புக்கு வழி செய்கிறது.
அண்மையில் லண்டனில் ஒரு வைத்தியசாலைக்கு ஒரு தம்பதியினர் வந்தார்கள். மனைவிக்கு விருப்பமில்லாத சமயத்தில் அவர் கர்ப்பமாகி விட்டாராம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை. அதற்கு வழி தேடி வருகிறார்கள். இப்படி பல விடயங்கள் நாம் வாழும் சமூகத்தில் தினமும். நாங்க என்னடான்னா.. கடவுளைப் பழிக்க என்று மூடத்தனமா சமூகத்தை அணுகிக் கொண்டிருக்கிறம். புகலிடத்தில் படிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அங்கு எல்லாம் தெளிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அங்கு கூட பிரச்சனைகள் பல ரூபத்தில். ஊரில இருந்து இங்கு வருபவர்களே இப்படியான இக்கட்டில் அடிப்படை பாலியல் அறிவின்றி வாழ்வது அதிகம். இவர்கள் குடும்பக்கட்டுப்பாடு முறை அறிவின்றி, பாலியல் தொந்தரவுகளுடன்.. மற்றும் பிறப்புரிமை நோய்த்தாக்கமுள்ள குழந்தைகள் என்று சிரமப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. :)
இங்கு கடவுளை முன்னிறுத்தவல்ல எமது வாதம். சிலர் அறியாமல் புரியாமல் விடயங்களை அணுகுவதையும்.. விடயங்களை அணுகும் போது வெறும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதையும் செய்யாமல்.. தேவையான சீர்திருத்தங்களையும் முன்மொழியுங்கள்..! அதுதான் சமூகத்துக்குப் பயன்படும். கடவுள் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிப்பது அல்லது சீர்குலைப்பதல்ல முக்கியம். அந்த எண்ணக் கோட்பாட்டை அழிக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது சமூகம் அடையும் நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள்..! அதற்கேற்ப சமூகத்தை தயார்படுத்த வழிகாட்டுங்கள். :)
  • நெடுக்ஸ்

திருமண மந்திரங்கள்!
தமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.
இந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.
திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.
''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.
இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்
இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)
"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."
இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.
இன்னும் ஒரு மந்திரம்:
"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? :lol::lol::lol: )
உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.
இப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.
தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?
கள நிர்வாகிக்களுக்கு ஒரு வேண்டுகோள். இதிலே உள்ளவைகளை வெட்ட வேண்டாம். அப்படி உங்களுக்கு வெட்ட வேண்டும் என்றால், இந்த மந்திரங்களை சொல்பவர்களை போய் வெட்டுங்கள்.


http://thathachariyar.blogspot.nl/2010/12/blog-post_02.html

http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_23.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக