தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, August 31, 2015

இறந்துபோன இரட்டையர்களை தெய்வமாக வழிபடும் பழங்குடியினர்: அவர்களின் உருவபொம்மையை பள்ளிக்கு அனுப்பும் விநோதம் (வீடியோ இணைப்பு)

மேற்கு ஆப்பிரிக்காவில் இறந்துபோன இரட்டையர் குழந்தைகளுக்கு உருவபொம்மை செய்து அதை குழந்தையாக பாவிக்கும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் பகுதியை சேர்ந்தவர்கள் ஃபொன் பழங்குடியினர்.
உலகளவில் அதிக இரட்டையர்கள் பிறக்கும் இனங்களில் இவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரட்டையர்களாக பிறக்கும் குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டால் அவர்களுக்கு உருவபொம்மை செய்கின்றனர்.
பொம்மைக்குள் இறந்த இரட்டையர்களின் ஆன்மா உள்ளது என்பது அவர்களது நம்பிக்கை.
மேலும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தங்களின் குடும்பத்திற்கு பல துன்பங்கள் ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.
அதன்படி இரட்டையர்களாக இருக்கும் குழந்தைகள் இறந்துபோனால் அவர்களை போலவே உருவபொம்மை செய்து அந்த பொம்மைகளை குளிக்கவைத்து அதற்கு உணவும் அளிக்கின்றனர்.
சில வேலைகளில் சிறுவர்களுடன் சேர்த்து அந்த பொம்மைகளையும் பள்ளிக்கு அனுப்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அந்த பொம்மைகள் உடன் இருந்தால் எந்த தீய சக்தியும் தங்களை நெருங்காது என்று நம்பும் அவர்கள் பொம்மைகளை எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்கின்றனர்.
எங்காவது பயணம் செய்யும்போதும் மட்டும் அந்த பொம்மைகளை குழந்தைகள் வளர்ப்பு இல்லத்தில் விட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment