தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

300 ஆண்டுகளாக பேய்கள் மட்டுமே வசிக்கும் சபிக்கப்பட்ட கிராமம்


நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் வேலைவாய்ப்புக்காகவும், கல்வி மற்றும் இன்ன பிற வசதிகளுக்காகவும் மக்கள் கிராமங்களை காலிசெய்துவிட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான்.
ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85 கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒட்டுமொத்தமாக கிராமத்தை விட்டு சென்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா. ஆம் அந்த கிராமத்தின் பெயர் குல்தரா.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மெர் என்னும் மாவட்டத்தில் உள்ளது குல்தரா கிராமம். எங்கு திரும்பினாலும் மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் மட்டுமே வாழும் ஒரு சபிக்கப்பட்ட கிராமம்.
இந்த கிராமத்தின் வரலாறு 1291ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. பளிவால் பிராமனர்கள் என்ற சமூகத்தினர் செல்வ செழிப்புடன் வாழ்ந்த கிராமம் இது. இதனுடன் இணைந்து சுமார் 84 கிராமங்கள் இருந்தன.
இந்நிலையில் சலிம் சிங் என்ற திவான் கிராம தலைவரின் மகளின் அழகில் மயங்கி அவளை அபகரிக்க திட்டமிட்டான். இதன்படி அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தரவில்லை என்றால் மொத்த கிராமத்தையும் அழித்துவிடுவதாக எச்சரித்துள்ளான்.
அவனுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த 85 கிராம மக்களும் 1825 ஆண்டு வாக்கில் கிராமத்தை மொத்தமாக காலி செய்து எங்கோ சென்றுவிட்டனர் என்று இந்த கிராமத்தின் வரலாறு கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த கிராமம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்ததாக இருக்க கூடாது என்று சாபமிட்டு சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 300 ஆண்டுகளாக இப்பகுதியில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை என்றும் அதையும் மீறி வசிக்க முயற்சி செய்தால் இரவு நேரங்களில் அமானுஷிய உருவங்கள் தெரிவதாகவும், விநோத குரல்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை பலரும் அனுபவித்துள்ளதாகவும் கூறுகின்றனர். எனினும் இப்பகுதியை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக