தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

எகிப்தில் 3 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ராணி நெபர்திதியின் ரகசிய அறை கண்டுபிடிப்பு


எகிப்து நாட்டின் பாரோ மன்னர்களில் புகழ் பெற்றவர் துட்டன்காமுன். இவரது கல்லறையின் உள்ளே ராணி நெபர்திதி என்பவரின் கல்லறை ஒன்று இருக்கிறது என இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவ்ர் கண்டறிந்துள்ளார்.
அரிசோனா பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். நிகோலஸ் ரீவ்ஸ். எகிப்து நாட்டின் புகழ் பெற்ற பாரோ மன்னர்களில் ஒருவரான துட்டன்காமுன் என்பவரது கல்லறை குறித்த ஆய்வில் இவர் ஈடுபட்டு உள்ளார். இந்த கல்லறை கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டை கடந்துள்ளது.
ராணி நெபர்திதி
துட்டன்காமுனின் தாய் ராணி நெபர்திதி என்று நம்பப்பட்டு வருகிறது. இரு நிலங்களின் பெண் என்று அறியப்படும் புகழ் பெற்ற ராணியின் கல்லறை குறித்து பல வருடங்களாக விவாதங்கள் மற்றும் கருத்துகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், துட்டகாமுனின் கல்லறையில் இருந்து ரகசிய பாதை ஒன்று ராணியின் கல்லறை நோக்கி செல்வதை கண்டுபிடித்துள்ளார். ரீவ்ஸ் கண்டுபிடித்துள்ள இந்த விசயம் உண்மை எனில், தொல்லியல் துறையில் பல ஆண்டு கால முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இது இருக்கும்.
டிஜிட்டல் முறை
துட்டன்காமுனின் கல்லறை சுவரை டிஜிட்டல் முறையில் அதிக துல்லிய ஸ்கேன் முறையில் ஆய்வு செய்து டாக்டர் ரீவ்ஸ் இந்த முடிவிற்கு வந்துள்ளார். கல்லறையின் உள்ளே இரு பெரிய கதவு வழி பாதைகள் இருந்துள்ளன. அதனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கல்லறையை கட்டியவர்கள் மூடி வைத்து உள்ளனர். ஒரு கதவு வழியே செல்லும் பாதை சேமிப்பு அறைக்கு செல்லலாம் என அவர் நம்புகிறார்.
ஆனால், 2வது கதவு வழியே செல்லும் பாதை ராணியின் கல்லறைக்கு செல்லும் என அவர் கருதுகிறார். துட்டன்காமுனின் புதைக்கப்பட்ட அறையின் அளவு குறித்து நிபுணர்கள் குழப்பமுடனேயே இருக்கின்றனர்.
ரீவ்ஸ் கூறும்போது, மறைவு நாட்கள் குறித்த கண்டுபிடிப்பு நமது கற்பனைக்கு எட்டாத வகையில் பாரோ மன்னனின் அறை மற்றும் நெபர்திதி உறங்கும் முக்கிய கல்லறை ஆகியவை இருக்கும் என்பதை எடுத்துரைக்கிறது என கூறுகிறார். இவரது கண்டுபிடிப்பு தீவிர கருத்தாய்வுக்கு உட்பட்டது என்று மான்செஸ்டர் பல்கலை கழகத்தில் உள்ள எகிப்தாலஜியின் மூத்த விரிவுரையாளர் ஜாய்ஸ் டில்டெஸ்லி என்பவர் கூறியுள்ளார்.
கூடுதல் அறைகள்
அந்த கல்லறையில் கூடுதல் அறைகள் இருக்கும் என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தற்பொழுது கிடைத்துள்ள சான்றுகளை கொண்டு இந்த அறைகளை எப்படி அதனை உருவாக்கியவர்கள் கட்டினார்கள் என கூற முடியாது என்றும் ஜாய்ஸ் கூறியுள்ளார்.
ஆனால், ராணியின் கணவரான அகிநேட்டன் என்ற பாரோ மன்னரால் அமர்னா என்ற நகரத்தில் உருவாக்கப்பட்ட பகுதியில் நெபர்திதி புதைக்கப்பட்டு இருக்க கூடும் என ஜாய்ஸ் நம்புகிறார். அதன்பின், ராணியின் மகன் என கூறப்படும் துட்டன்காமுன் தெபஸ் பகுதிக்கு ராணியின் உடலை கொண்டு சென்று இருக்க கூடும் என்றோ அல்லது இல்லை என்றோ கூறுவது கடினம் என அவர் கூறுகிறார்.
தொல்லியல் துறை
அமர்னா அரச குடும்பத்தினரின் உடல்களை அவர் வேறு இடத்திற்கு கொண்டு சென்றதற்கு நம்ப கூடிய சான்று இருக்கிறது. ஆனால், ராணி மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் புதைக்கப்பட்டிருகக கூடும் என நான் எதிர்பார்க்ககிறேன் என்று ஜாய்ஸ் கூறுகிறார். டாக்டர் ரீவ்ஸ், ஜாய்சிடம் கூறும்போது, ஒவ்வொரு சிறு சான்றும் முடிவுக்கு வர முடியாத ஒன்றாக இருக்கிறது.
அவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஆய்வு செய்திட்டால் எனது முடிவை தவிர்க்க முடியாது. எனது கருத்து தவறு என்றால் அது தவறு. அது சரி என்றால் தொல்லியல் துறையில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்டுபிடிப்பு இது என ரீவ்ஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக