தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூலை, 2015

செல்போன் பயன்படுத்தினால் புற்று நோய் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஜெர்னல் எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், செல்போன் கதிர்வீச்சுக்களால் புற்றுநோய் மட்டுமின்றி வளர்சிதை மாற்றங்கள் உட்பட மேலும் பல நோய்கள் ஏற்படவும் செல்போன்கள் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகின்றது.
இதன் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி தொடர் தலைவலி, உடல்சோர்வு, தோல் வியாதிகள் போன்றவைகளும் வருகிறது என்கிறது.
இந்த பாதிப்புகள் தற்காலிகமானது அல்ல எனக் கூறும் இந்த ஆய்வு, இவை நீண்ட நாளைய பாதிப்புகளாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக