தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஜூலை, 2015

வரலாற்று பொக்கிஷங்கள் மறைந்திருக்கும் குவாலியர் (வீடியோ இணைப்பு)


குவாலியர் மத்திய பிரதேசத்துக்கு பெருமை சேர்க்கும் முக்கிய நகரம்.
இது ஒரு நீண்ட மன்னராட்சி வரலாறுகளைக் தன்னகத்தே கொண்ட நகரம். அதனால், வரலாற்று பிரியர்கள் இங்கு காண வேண்டிய நினைவிடங்கள் அதிகம்.
குவாலியரை பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுத் தலமாகவே சுற்றுலாப் பயணிகளால் பேசப்படுகிறது.
பிரத்திஹாரஸ், கச்வாஹஸ், தோமர், மராத்தியர்கள் போன்ற ராஜபுத்திர குலத்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.
அவர்களால் உருவாக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், கோவில்கள், மற்றும் நினைவிடங்கள் என பல வரலாற்று பொக்கிஷங்கள் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவே விட்டுச்சென்றது போல காணப்படுகின்றன.
எப்படி நாம் திட்டமிட்டு சுற்றிப் பார்த்தாலும் சிலவற்றை பார்க்க மறந்துவிட்டு வருவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குவாலியர் கோட்டை
இது சாண்ட்ஸ்டோன் மலையின் மீது அமைந்துள்ளது. பள்ளத்தாக்கிலிருந்து பார்ப்பதுக்கு அழகாக காட்சியளிக்கிறது. குவாலியர் கோட்டை தோமர் ஆட்சியில் நிர்வாக தலைமையிடமாக விளங்கியது. பல மன்னர்களின் ஆட்சியிலும் அது தொடர்ந்திருந்தது.
ஜெய் விலாஸ் அரண்மனை
இந்த அரண்மனை 1874 ல் கட்டப்பட்டுள்ளது. அரச ஆடம்பரமும் செய்நேர்த்தி கம்பீரமும் கொண்டது. இது பார்ப்பவர்களிடம் தோற்றத்தால் பயபக்தியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.
குவாலியர் மன்னர் ஜெயாஜி ராவ் கட்டிய இந்த அரண்மனையில் இப்பொழுதும் அவருடைய வாரிசுகள் குடியிருந்து வருகிறார்கள். இது 400 அறைகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய கோவில்
குவாலியரில் உள்ள சூரிய கோவில் அல்லது சூரிய மந்திர், 1988 ம் ஆண்டு G.D. பிர்லாவால் புதிதாக கட்டப்பட்ட கோவிலாகும்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள புகழ் வாய்ந்த கோனார்க் சூரிய கோவிலை போல அச்சு அசலாகவே கட்டப்பட்டதாகும். சூரிய கடவுளுக்காக கட்டப்பட்டது.
வெளியில் சிவப்பு சாண்ட்ஸ்டோனாலும் உள்ளே வெள்ளை மார்பிளாலும் அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் அனைத்து இந்து மத கடவுளரும் இடம்பெற்றுள்ளனர்.
சிந்தியா அருங்காட்சியகம்
ஜெய் விலாஸ் அரண்மனையின் ஒரு பகுதிதான் சிந்தியா அருங்காட்சியகம், கோட்டை குற்றவாளிகளுக்கு சிறையாகவும் பயன்பட்டது.
சாஸ் பாகு கோவில்
சாஸ் பாகு கோவில் அல்லது சஹஸ்ட்ரபாகு கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது குவாலியர் கோட்டைக்கு கிழக்கே அமைந்துள்ளது. 1092 ம் ஆண்டு கச்சஹபகட்டாவின் அரசர் மஹிபாலாவால் கட்டப்பட்டது.
மாதவ் தேசிய பூங்கா
ஷிவ் புரியில் உள்ள இந்த பூங்கா 355 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் பயணிகளால் பார்த்து ரசிக்கப்படுவதோடு, குவாலியரின் நினைவுச் சின்னங்களும் இங்கு இடம்பெற்றுள்ளது மேலும் சிறப்பு சேர்க்கிறது.
கலா வித்திகா அருங்காட்சியகம்
குவாலியரில் உள்ள இந்த அருங்காட்சியம் மத்திய பிரதேசத்தில் புகழ்பெற்றது. இங்கு இடம்பெற்றுள்ள ஓவியங்கள், கருவிகள், ஆயுதங்கள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் மத்திய பிரதேசத்தின் வரலாற்றையும் வளமான கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது.
டைக்ரா அணை
டைக்ரா அணை குவாலியரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையில் சுற்றுலாப் பயணிகள் ஜாலி படகுப் பயணம் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாவயா நகரம்
பத்மாவதி பாவயா நகரம் மிகப் பழமையானது. மிகப் பழமையான சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆன்மிக நகரம். இது பாரா மற்றும் சிந்து நதிக்கு இடையில் அமைந்துள்ளது.
சந்தேரி
சந்தேரி இடைக்காலத்தில் மூலப்பொருள்கள் கிடைப்பதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் முக்கியத்துவம் அடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகள் மத்திய பிரதேசத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக உள்ளது.
நினைவுப் பொருள்கள்
குவாலியர் செல்பவர்கள் நினைவாக வாங்கிவர ஏராளமான பொருள்கள் உள்ளன. குவாலியர் கைவினை பொருள்களுக்கும் தோல் பொருள்களுக்கும் புகழானது. வாங்குவதுக்கு சரஃபா பஜார், ஜியாஜி சவுக் பஜார் குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜ்வாடா, லஷ்கர் பொருள்கள் வாங்க குவாலியரில் சிறந்த இடங்களாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக