தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஜூலை, 2015

ஆபத்தை ஏற்படுத்தும் சர்க்கரை !

அன்றாடம் பயன்படுத்தப்படும் சர்க்கரையின் அளவினால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என தொடர்ச்சியாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் நாள் ஒன்றுக்கு 5 சதவீதத்திற்கு மேற்படாத கலோரியை உள்ளடக்கிய சர்க்கரை உள்ளெடுக்கப்படுவதனால் நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாள் ஒன்றிற்கு உச்ச பட்சமாக 7 தேகரண்டி சர்க்கரையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தற்போது அதிகளவானவர்கள் இதன் இரு மடங்கு சர்க்கரையை உள்ளெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றிற்கு உள்ளெடுக்கும் சர்க்கரையின் அளவிரைன பாதியாக குறைப்பதன் மூலம் பல் தொடர்பான நோய்களையும், சர்கரை வியாதிகளையும் குறைக்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வினை இங்கிலாந்திலுள்ள Scientific Advisory Committee on Nutrition (SACN) நிறுவனத்திலுள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக