தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜூலை, 2015

பிளாஸ்டிக் டப்பாக்களில் சாப்பிடுகிறீர்களா? தலை முடி உதிரும்

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுடன் இன்னும்பிற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முடி உதிர்வில் தொடங்கி 70 சதவீதம் வளர்சிதை (மெட்டாபாலிஸம்) பிரச்சனைகளுக்கு இதுவே மூல முதல் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடைகளில் குறைந்த விலை பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறைய வந்துவிட்டன. இவை எல்லாம் தரமானது என கூற முடியாது.
பொதுவாக, பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ (பிஸ்பெனால்-ஏ- bisphenol-a) எனப்படும் வேதிப்பொருள் உருவாகும்.
இது, ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும்.
தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது.
'பெட்' (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், டை- எத்தில் - ஹைட்ரக்சில் அமைன்(டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது.
இது புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், 'டேகா' தண்ணீரில் கலந்து, உடலுக்குள் செல்கிறது.
இதுவும் ஆபத்தான ஒன்று, பி.பி.ஏ பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள்(புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும்.
டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.
சமீபத்தில் பெங்களூரில் முடி உதிர்வு சிகிச்சைக்காக வந்தவர்களில் 430 பெண்கள், 570 ஆண்கள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், இவர்களில் 92 சதவீதம் பேரின் ரத்தத்தில் 'பிஸ்பெனால் ஏ' (BPA) எனப்படும் பிளாஸ்டிக்கின் சேர்மம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், வேலைக்கு செல்லும் தரத்தினரான இவர்கள் அனைவரும் அன்றாடம் 4-6 முறை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக