தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 31, 2015

மிகப்பெரிய சுரங்க நகரம் கட்டியுள்ள எறும்புகள்: படித்தால் சுவாரசியம் (வீடியோ இணைப்பு)


பிரேசிலில் ஒரு நெடுஞ்சாலையோடு ஒட்டிய தள பகுதியில் அறிவியல் ஆய்வாளர்கள் தோண்டியபோது, அங்கு இலைகளை துண்டித்து எடுத்துச் செல்லும் எறும்பு இனம், ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் ஒரு பெரிய சாம்ராஜ்யமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நல்ல சாலைவசதி உட்பட அந்த எறும்புகளின் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய நாகரீக நகரமே உள்ளே இருந்ததைக் கண்டு வியப்படைந்துள்ளனர்.
மேற்புற தரைதளத்தில் 10 இடங்களில் ஆங்காங்கே புற்றுகள் போன்ற துளைகள் இருந்தது. இது உள்ளே இருக்கும் மில்லியன் கணக்கான எறும்புகளுக்கு காற்றோட்ட வசதி (Air cindition) க்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அறிவியலர் குழு உள்ளே தோண்டியபோது, 500 சதுர அடிகள் பரப்பளவிலான பள்ளம் இருந்தது, அதன் ஆழம் 26 அடிகள் கொண்டது. இதை தோண்டுவதற்கு 10 நாட்கள் ஆகும் என்றும் இதில் 10 டன் கான்கிரீட் கலவைகள் கொட்டிதான் நிறைவு செய்யமுடியும் என்றும் அது சார்ந்த தொழில் வல்லுநர்கள் கணித்து கூறுகின்றனர்.
எறும்புகள் கடுமையான உழைப்பாளிகள். நம் வீட்டிலேயே ஒரு தின்பண்டத்தை வைத்துவிட்டு நகர்ந்தால் போதும். அதை சரியாக தேடிவந்து அணு அணுவாக பிரித்து, தலையில் சுமந்தபடி வரிசையாக போய்க்கொண்டு இருக்கும்.
எவ்வளவு மழை வெள்ளம் வந்தாலும், அந்த பகுதியில் உள்ள எறும்பு இனம் அழிந்துவிடுவதில்லை, அதற்கு காரணம், மனிதனைவிடவும் தீவிரமாக அவைகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.
சாதாரண புற்றுகளுக்குள்ளே முறையான அமைப்புகளை எறும்புகள் செய்துவைத்திருப்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.
ஆனாலும், இங்கே பெரிய திட்டமிடலோடு பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருப்பது எறும்புகளின் சக்தியை இன்னும் ஒரு படி மேலாக நம்மை அறிய வைத்துள்ளது.
அதனால்தான், அதை கண்டுபிடித்த அறிவியலர் குழுவின் தலைவர் லூயிஸ் போர்ஜி ‘உயர்வான உயிர்கள்’ (super organism) என்று எறும்புகளை வியந்து கூறியுள்ளார்.
மேலும் உலகத்திலேயே இதுதான் எறும்புகளின் மிகப்பெரிய நகரம் என்றும், இது மனிதர்கள் எழுப்பிய உலக சாதனையான சீன பெருஞ்சுவருக்கு போட்டியாகும் தகுதியில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment