தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 30, 2015

பிரத்யேக வசதிகளுடன் அதிரடியாக அறிமுகமான ஹோண்டா ஜாஸ் மொடல் கார் (வீடியோ இணைப்பு)

நாட்டின் ப்ரீமியம் கார்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்திய லிமிடெட் (HCIL), தனது அடுத்த படைப்பான ஹோண்டா ஜாஸ் மொடல் காரை கடந்த யூலை 21 ஆம் திகதி சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
1.5L i DTEC இன்ஜின், இந்த வகையினத்திலேயே சிறப்பானதாக லிட்டருக்கு 27.3 கி.மி மைலேஜை வழங்கும்.
இப்பிரிவில் முதல் முறையாக பெட்ரோல் வகையினத்திற்கு பேடில் ஷிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட நவீன CVT வழங்கப்பட்டுள்ளது.
இப்புதிய ஜாஸ், அற்புதமான ஸ்டைலிங், சிறப்பான பேக்கேஜ், முன்னோடித்துவ எரிபொருள் சிக்கனம், நவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனம் மற்றும் நெகிழ்வுதன்மை கொண்ட பயன்பாடு ஆகியவைகளுடன், உலகின் மிகச்சிறந்த செயல்பாட்டுத் தன்மைகள் கொண்ட காம்பேக்ட் ஹேட்ச்பேக்காகத் திகழ்கிறது.
ஹோண்டா வகையினத்தின் உலகளாவிய மாடலான ஜாஸ், அதன் செயல்பாட்டுத்தன்மை, குதூகலமான ஓட்டுதல் தன்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவைகளுக்காக உலகளாவிய அளவில் பெயர் பெற்றுள்ளது.
புத்தம் புதிய ஜாஸ், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வகையினங்களில் கிடைக்கபெறும். டீசல் வகையினம் இந்திய சந்தைக்காக பிரத்தியேகமாக 1.5 Li-DTEC டீசல் இன்ஜினுடன் கிடைக்கபெறும் மற்றும் இந்த வகையினத்தில் முன்னோடித்துவமான லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜை வழங்கும்.

No comments:

Post a Comment