தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஜூன், 2015

ஆரோக்கியம்-ஆயுள் நீட்டிப்புக்கான வழி !!


மனிதன் உயிர் வாழ உணவு, நீரைவிட பிராணவாயு மிக முக்கியம்.
சுறுசுறுப்பாக மனிதன் இயங்கவும், நினைவாற்றல் மிகுந்திடவும் மூளைக்குத் தேவையான ரத்தத்தை சுத்தம் செய்து அனுப்புவது இந்தக் காற்று. தூய்மையான பிராணவாயு அதிகாலை பூமியின் மேல் பரவி இருக்கும். அரை மணி நேரம், நடை பயிலுகையில் 4 விநாடி காற்றை உள்ளே இழுத்து, 4 விநாடி அடக்கி, 4 விநாடி அந்தக் காற்றை வெளியேற்றி பயிற்சி செய்யவேண்டும்.
ஆலிவ் ஆயில் உடம்பு முழுக்கவும், தலைக்கு விளக்கெண்ணெயும் வாரம் 2 முறை தேய்த்துக் குளிக்கலாம்.
கண்கள் சோர்வாகும்போது இமைகளை
மூடி- விழிகளை இடம் வலமாக 70 தடவை, மேல் கீழாக 40 தடவை ஓட்ட வேண்டும். பின்னர் இடமிருந்து வலமாக - வலமிருந்து இடமாக 10 முறை கண்களைச் சுழற்ற வேண்டும். அடுத்து குளிர்ந்த நீரை கைகளில் எடுத்து மூடிய விழிகளுக்கு கொஞ்சம் ஒத்தடம் தந்த பின், திறந்த வெளி சென்று கண்களில் ஆக்சிஜன் படும்படி 5 நிமிடம் உலாவ வேண்டும்.
அப்போது கண்கள் புத்துணர்வு பெற்று
விடும். காதுகளைப் பாதுகாக்க செல்போனை நேரடியாக காதில் வைத்து பேசுவதைத் தவிர்க்கலாம்.
சென்னையில் பைக் ஓட்டுபவர்கள் மூக்கின் மீது கர்சீப் கட்டிக் கொள்ளலாம் . படுக்கைக்குச் செல்லும் முன் பல்துலக்கி , பாதம் கழுவுதல் உத்தமம்.
காலை 2 டம்ளர் தண்ணீர் அல்லது நீராகாரம் ; நேரம் தவறாமல் உணவு ; நாள் இரண்டு முறை டாய்லட் ; இரவு 7 மணி நேரத் தூக்கம்....
ஆரோக்கியம்-ஆயுள் நீட்டிப்புக்கான வழி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக