தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2015

ஞாபகசக்தியை அதிகரிக்கும் ப்ராக்கோலி

ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது.
செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.
மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது.
ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள அதிப்படியான கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.
ப்ராக்கோலியில் நோய் எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.
ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களை குணப்படுத்துகிறது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகி, தோல் பளபளப்பாகும்.
பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.
ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை ஞாபகசக்தி அதிகரிக்க உதவுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக