தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2015

பாசிசம்?

பாசிசம்....பாசிசம் என அரசியல் பேசும் அனைவரும் இச்சொற்பத்தைப் பாவிக்கிறார்கள். இதைத் தெரிந்துதான் பாவிக்கிறார்களா? அல்லது மொழி அழகுக்காகப் பாவிக்கிறார்களா என்பது கேள்வியாகவே உள்ளது. இது உண்மையில் ஒரு அரசியல் சொற்பதமே
இது 1919ல் இருந்து முசோலி எனும் இத்தாலிய சர்வாதிகாரிகாலத்தில் இருந்தே பாவிக்கப்பட்டு வருகிறது. இச்சொல்லானது இத்தாலியமொழி வழி வந்ததே. இதை 1922-43வரை உருவாக்கி பயன்படுத்தி வந்தார் முசோலினி. இந்த இத்தாலியச் சொல்லானது பாசியோவில் இருந்து பாசிஸ்மோவாகி பின் முசோலினியால் பாசிசம் ஆனது.
இந்தப்பாசிசத்தை முதலாளித்துவம்> சோசலிசம்> கமினிசியம்> மாக்சியம்> இடதுசாரித்துவம் என்ற எந்த வரையறைக்குள்ளும் அடக்க முடியாதது. ஒருபார்வைக்கு நடைமுறையில் சிறிது கமினிஸ்ட் போல் தோற்றம் கொண்டாலும் இது முழுமையான முதலாளித்துவ அணுகுமுறைக் கொண்டது. இங்கே தனிமனிதனும் அவன் குழுவும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இது வெறும் அரசுசார்ந்த கட்டமைப்பா? அரசுக்கு மட்டும் பாவிப்பாதா? நாடு மட்டும் சார்ந்ததா? என்ற கேள்விகள் எழலாம். ஆம் இது நாடும் மக்களும் சார்ந்ததே. அதற்காக அரசு மட்டம் சார்ந்தது என்று கூறவது தவறாகும்.
சரி பாசிசம் என்றால் என்ன? இது ஒரு அரசியல் சித்தார்ந்த அரச சமூகக்கட்டமைப்பு எனலாம். இங்கே அரசு சர்வாதிகாரிபோல் தொழிற்படும். தனிமனித> அமைப்புகள் சார்ந்த எந்த கருத்துக்களும் கேட்கப்படமாட்டாது. விடுதலை அமைப்புகளும் இப்படியான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இது ஒரு விடுதலை அமைப்பு> போராளிகள் கூட்டம்> குழுக்கள் என்பனவற்றிலும் இந்த பாசிசமுறை பாவிக்கப்படலாம். விடுதலைப்போராட்டத்தில் மக்களின் கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது அனைத்தும் போராட்டக் குழுவின நலன் கருதி இருக்குமாயின் அது பாசிஸ்சம் எனப்படும். அரசிலோ குழுவிலே விடுதலை அமைப்பிலோ சர்வ அதிகாரமும் கொண்டு தலைமைத்துவம் இருக்கும். உதாரணமாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்பது வெறும் மட்டமான கேவலங்கெட்ட முழுப்பொய்யான சொற்பதமே. ஒரு ஜனாதிபதியானவர் சர்வாதிகாரம் கொண்டவராக தான் நினைத்ததை ஒரிரவில் செய்து முடிக்கும் அதிகாரத்தை வைத்திருப்பவராக உள்ளார். இது எப்படி ஜனநாயக சோசலித்தினுள் அடங்கும். இந்த ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுகிறார் என்பதற்காக இது ஜனநாயகம் என்று கருதவே முடியாது. ஒரு ஜனாதிபதி பாசிட்டாகவே உருவாக்கப்படுகிறார்.
ஒருநாட்டையோ போராட்டக்குழுவையோ எடுத்துக் கொண்டால் அக்குழு சர்வ அதிகாரங்கள் கொண்டதாகவும் தலைமை மட்டுமே தீர்மானிக்கும் சக்தியாகவும் எதிர் கருத்துக்களை அனுமதிக்காததாகவும் நாட்டின் தலைமையின் நலன் மட்டுமே கருத்துடையதாகவும் இருக்கும். நாட்டில் அங்கம் வகிக்கும் மக்களோ குழுவின் அங்கத்தவர்களே பேச்சுரிமை கருத்துரிமை அற்றவார்களாக இருப்பர்.
முசோலியின் புரட்சிக்காலத்தில் இதை நாசனல் சோசலிசம் (தேசியசோசலிசம்) என்று கூற முயற்சித்தனர். பாசிசம் என்றுமே சோசலிசத்தை நெருங்க இயலாது. சோசலிசத்தில் மக்களின் கருத்துக்கள் ஏற்புடையது. அரசு> தலைமை என்பன மக்களின் கருத்தை நடைமுறைப் படுத்தும் கருவிகளாகவே இருக்கும். உண்மையின் ஜனநாயக முறையும் அதுவே. அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் கருத்துக்களை நடைமுறைப் படுத்தும் ஊழியர்களே. அதாவது உயர் அதிகாரம் கொண்டவர்கள் மக்களே. இவர்கள் மக்களின் ஊழியர்கள். இதை எத்தனை அரசியல்வாதி உணர்ந்திருக்கிறான்.
பாசிசம் என்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரம் கொண்ட மக்களினதோ அங்கத்தினரது கருத்துக்களையோ செவிமடுக்க மறுக்கும் ஒருகட்டமைப்பு. இது தலைமையினது நாட்டினதும் நலனின் மட்டும் கருத்துடையது.
பாசிச எதிரி
நோர்வே நக்கீரா 26.06.2015


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக