தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஜூன், 2015

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!


இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்’’

‘‘நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.

பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணை குளியல் சர்ம பாதுகாப்பில் சிறந்த சிகிச்சை – தோலுக்கு எண்ணை பதமிடுவது. குளிப்பதாலும், எண்ணை குளியலாலும் ஏற்படும் நன்மைகள் உடல் சூடு, காங்கை குறைகிறது.

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்..

சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.

இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.

இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

உங்களுக்கும் நல்லதாய் , எனக்கும் நல்லதாய்
நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன்
================================
முடிசார்ந்தமன்னரும்முடிவில
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே


சாய் பாலாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக