தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஜூன், 2015

சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



கிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்ததுமான அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
சோழ இளவரசியான சீர்பாததேவியினால் கட்டுவிக்கப்பட்ட ஆலயமாக கருதப்படும் இந்த ஆலயமானது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 
பத்து தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் வீரமுனையை சேர்ந்த மட்டக்களப்பு வாழ் மக்களினால் தேர்த்திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது.
கிழக்கிலங்கையின் வரலாற்றில் யானைகள் பவனியுடன் தேர்த்திருவிழா நடைபெறும் ஆலயமாக வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது.
அத்துடன் கிழக்கிலங்கையின் தேரோடும் ஆலயம் என்ற புகழையும் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் பெற்றுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூமழை சொரிய ஊர்வலகமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக