தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூன், 2015

சூரியனுக்கு அருகில் நெருங்கிய நாசா: மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)

சூரியனை மிக அருகில் படம்பிடித்து அதன் புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் சோலார் டைனமிக்ஸ்(Solar Dynamics) தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த தொலைநோக்கி அதிநவீன கமெராக்கள் மூலம் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
இந்நிலையில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சூரியனை பல்வேறு கோணத்தில் படம்பிடித்து அனுப்பியுள்ளன.
சூரியனில் நடைபெறும் நிகழ்வுகள், கொந்தளிப்புகள் போன்றவற்றை இந்த புகைப்படங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றன.
மேலும், இந்த தொலைநோக்கி, சூரியனில் உள்ள பல ஆயிரம் மடங்கு வலிமை மிகுந்த காந்தப்புலமான பிளாஸ்மா வளையங்களை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த காந்தப்புலங்களிலிருந்து சூடான வாயுக்கள் வெளியேறுகின்றன, அதன் பின்னர் பிரகாசமான வெளிச்சம் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என கோடார்ட் விண்வெளி மைய அதிகாரி டாக்டர் அலெக்ஸ் யங்(Alex Yung) கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக