தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஜூன், 2015

அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு காத்திருக்கு ஆபத்து! அதிர்ச்சி தகவல்

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்தல், தொப்பை ஏற்படுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இவ்வாறிருக்கையில் தற்போது தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதாக மற்றுமொரு ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணனியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், வீடியோ ஹேம் விளையாடுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு இப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக அளவில் 27 மில்லியன் மக்கள் இவ்வாறு மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவுஸ்திரேலியாவில் வயது வந்தவர்களில் 14 சதவீதமானவர்வகளுக்கும், 16 தொடக்கம் 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 15 சதவீதமானவர்களுக்கும் இப்பாதிப்பு உள்ளதாக Deakin பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக