தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, June 25, 2015

உடல் வீக்கத்தால் அவதியா? இதோ குணமாக்கும் முள்ளங்கி

காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளாமல் துரித உணவுகளிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறோம், அதனால் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றால் ஒரே வழி காய்கறிகள் தான்.
அதிலும் முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்.
முள்ளங்கியில் இரண்டு வகை உண்டு
1.சிகப்பு முள்ளங்கி
2.வெள்ளை முள்ளங்கி
முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்
கலோரி - 17 கிராம்
நார்ச்சத்து - 2 கிராம்
வைட்டமின் சி - 15 மில்லி கிராம்
கால்சியம் - 35 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 22 மில்லி கிராம்
காய்கறிளிலேயே வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான்.
முள்ளங்கியை விட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
100 கிராம் கீரையில்
கலோரி - 41 கிராம்
புரதம் - 3.8 கிராம்
நார்ச்சத்து - 1 கிராம்
வைட்டமின் சி - 81 மில்லி கிராம்
கால்சியம் - 400 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 59 மில்லி கிராம்
முள்ளங்கியின் மகத்துவங்கள்
1. முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும்.
2. சிறுநீரகத்தில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.
4. வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால், தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும்.
6. முள்ளங்கியைத் தட்டி சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
7. முள்ளங்கியில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (phytonutrients) தாதுச் சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியவையாக இருக்கின்றன.
8.50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
முள்ளங்கி சாறு
முள்ளங்கியை எடுத்து சுத்தம் செய்து சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள முள்ளங்கியை போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் மிளகு, சீரகம் ஒரு சிட்டிகையளவு சேர்த்து வடிக்கட்டி ஒரு டம்ளர் அளவு முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.தேவைப்படுவோர் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்
சிறுநீரைப் பெருக்கும், நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும்.
காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வாத நோய், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
கர்ப்பிணி பெண்கள் குடித்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

No comments:

Post a Comment