தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஜூன், 2015

மலையில் தெரியும் மனிதரின் முகம்: கனடாவில் 2 வருடமாக தேடிக் கண்டு பிடிக்கப்பட்டது !


கனடா நாட்டில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் , மனிதனுடைய முகம்போல காட்சியளிக்கும் ஒரு கல்பாறை உள்ளது. இதனை எதேட்சையாக கூஸ் என்னும் நபர் அவதானித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்தவேளை கீழ் உள்ள அழகான மலைத்தொடர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அதேவேளை அதில் மனிதனுடைய முகம் இருப்பது போன்று ஒரு பெரும் பாறை இருப்பதையும் அவர் அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் தமது புகைப்படங்களை பின்னர் பார்த்து வியந்துபோனார். இருப்பினும் அந்த மலை எங்கே இருக்கிறது என்று அவருக்கு தெரியாது.
கடந்த 2 வருடங்களாக அந்த மலை இருக்கும் இடத்தை தேடி அலைந்த கூஸ் , இறுதியாக அமைந்துள்ள இடத்தை கண்டுபிடித்து. பின்னர் வாடகைக்கு ஒரு சிறிய விமானத்தை அமர்த்தி அதன் அருகே சென்று புகைப்படம் எடுத்துள்ளார். இதுவரை எவரும் இந்த மலையின் இப்பகுதியை புகைப்படம் எடுத்ததே இல்லையென்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக