தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 மே, 2015

அதிக நேரம் தூங்கினால் ஆபத்து: எச்சரிக்கும் ஆய்வு

அதிக நேரம் தூங்கினால் பக்கவாதம் வரும் அபாயம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுவரை பக்கவாதம் ஏற்படாத 62 வயதுள்ள 9,692 நபர்களை பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களின் பழக்கவழக்கங்களை அறிந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 346 பேருக்கு பக்கவாதம் வந்திருந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த பேரில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் கொண்டிருந்தவர்கள் 986 பேர். அவர்களில் 52 பேருக்கு பக்கவாதம் வந்திருந்தது. இவர்களுக்கு மற்றவர்களை விட இந்த விகிதம் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அளவாக தூங்குகிறவர்களை விடவும் அதிகப்படியாக தூங்குகிறவர்களுக்கு 4 மடங்கு அதிகமாக பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. என்ன காரணம் என ஆய்வு செய்ததில், எப்போதும் போலவே அதீத கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பருமன், உடல் செயல்பாடு குறைவு ஆகியவையே காரணமாக இருந்தது.
6 முதல் 8 மணி நேரத் தூக்கமே ஆரோக்கியமானது என்பது அந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக