தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 28, 2015

எப்படி சாப்பிடுவது? சில விதிமுறைகள்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அவற்றை சாப்பிடுவதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.
இதோ சில விதிமுறைகள்:
நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டு, பொறுமையாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.
எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிப்பதை தவிர்த்துவிட்டு, உணவு அருந்திய பின்னர் தண்ணீர் குடியுங்கள்.
அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.
பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்.
பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.
சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.
சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்னர் சாப்பிடவும்.

No comments:

Post a Comment