தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 மே, 2015

பேஸ்புக்: ஒரு சாதனை பயணம்


பேஸ்புக் உருவாக்கப்பட்டதில் இணை நிறுவனராக இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்கின் உழைப்பு மட்டும் இல்லை.
பல பேர் பேஸ்புக் உருவாக்கத்திற்கு மார்க் ஜூக்கர்பெர்க்குடன் இணைந்து உழைத்துள்ளனர். அவர்களை பற்றி பார்க்கலாம்.
Zach Bercu
பேஸ்புக்கை தொடங்கியபோது Zach Bercu 10வது நபராக இணைந்தார். இவரது பேஸ்புக் ஐடி நம்பர் 31 ஆகும்.
ஆரம்பக்காலத்தில் AEPi (Alpha Epsilon Pi) என்ற அமைப்பின் மூலம் நெட்வொர்க் தொடர்பாக கற்றார். இந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தவர் தான் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.
தனது பட்டப்படிப்பை முடித்த Zach Bercu இஸ்ரேலில் ஒரு வருடம் இருந்தார். தற்போது நியூயோர்க்கில் ஒரு ரோடியோ தொழிநுட்ப துறையில் இருக்கிறார்.
Samyr Laine
Samyr Laine மார்க் ஜூக்கர்பெர்க்கின் அறையில் தங்கி இருந்த நபர் ஆவார். இவருடைய பேஸ்புக் ஐடி 32 ஆகும். இவர் படிக்கவில்லை. இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆவார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இவர் பங்கேற்றார்.
மார்க் ஜூக்கர்பெர்க்குடன் தூங்குவது, வயிறு முட்ட சாப்பிடுவது, அவருடன் வீடியோ ஹேம்ஸ் விளையாடுவது போன்ற வேலைகளில் மட்டும் ஈடுபடுவார்.
Manuel Antonio (Tono) Aguilar
இவரும் மார்க்கின் அறை நண்பர் ஆவார். இவர் பேஸ்புக்கை மார்க் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, அவரை உற்சாகப்படுத்துவார். இவருடைய பேஸ்புக் ஐடி 30 ஆகும்.
இவர் ஆய்வாளர் மற்றும் வர்த்தகராக இருந்தார். தற்போது ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு தலைவராக இருக்கிறார்.
Mark Kaganovich
Mark Kaganovich பேஸ்புக்கின் 7வது நபர் ஆவார். மார்க்கின் நண்பரான இவர், “மார்க் தன்னை புரோபைல் படம் வைக்க சொல்லி வற்புறுத்துவார்” என்று கூறுகிறார். இவர் phD முடித்து விட்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
Andrew McCollum
Andrew McCollum மார்க்கின் நண்பர் ஆவார். இருவரும் Operating Systems வகுப்பு படிக்கும் போது பழக்கமானவர்கள். மார்க் பேஸ்புக்கை உருவாக்கும்போது, பேஸ்புக்கின் முதல் Logo-வை வடிவமைக்க இவரிடம் தான் கேட்டுக் கொண்டார்.
Flybridge Capital Partners-ல் ஒரு தொழில்முனைவோராக இணைந்த Andrew McCollum, புதிய தொழிநுட்ப தொடக்கங்களுக்காக உதவி வருகிறார்.
Arie Hasit
Arie Hasit, மார்க்குடன் இணைந்து பேஸ்புக் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். Facebook's birthday notifications உருவாக்கியதில் இவருக்கு தான் அதிக பங்கு இருக்கிறது. மேலும் சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.
தற்போது இஸ்ரேலில் இருக்கும் இவர் ஒரு மத இளைஞர்கள் குழுவுக்கு தலைவராக இருக்கிறார்.
Dustin Moskovitz
Dustin Moskovitz பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருக்கிறார். இவர் மார்க்கின் வகுப்பு மற்றும் அறை நண்பராக இருந்தவர்.
தற்போது Asana-வின் இணை நிறுவனராகவும், Venmo, Flipboard மற்றும் Nationbuilder போன்ற தொழிநுட்ப தொடக்கங்களுக்கான முதலீட்டாளராகவும் இருக்கிறார். இவருடைய பேஸ்புக் ஐடி 6ஆகும்.
Chris Hughes
Chris Hughes மார்க்கின் வகுப்பு மற்றும் அறை நண்பராக இருந்தவர். மேலும், பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருக்கிறார்.
Mark Zuckerberg
பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருக்கும் Mark Zuckerbergன் ஐடி நம்பர் 4. முதல் 3 ஐடி நம்பர்களை அவர் தற்காலிகமாக உருவாக்கியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக